ThaniOruvan 2: ஜெயம் ரவியை தேடிவரும் எதிரி யார்..? தனி ஒருவன் 2 வில்லன் ரேஸில் ஃபஹத், அபிஷேக் பச்சன்

சென்னை: ஜெயம் ரவி நடிக்கவுள்ள தனி ஒருவன் 2 ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

ஜெயம் ரவி, மோகன் ராஜா, நயன்தாரா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன் படத்தில் வில்லனாக மிரட்டிய அரவிந்த் சாமி, இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

 Thani Oruvan 2: Fahadh Faasil or Abhishek Bachchan as the Villain role in Thani Oruvan 2

அதனை ஈடு செய்யும் விதமாக தனி ஒருவன் 2-வில் செம்ம வெயிட்டான வில்லனை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

தனி ஒருவன் 2 வில்லன் ரேஸ்: ஜெயம் ரவி கேரியரில் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய இந்தப் படம் 2015ம் ஆண்டு வெளியானது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். எப்போதுமே தெலுங்கில் ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்யும் மோகன் ராஜா, தனி ஒருவனில் தரமான சம்பவம் செய்திருந்தார்.

கதை, திரைக்கதை, மேக்கிங், பின்னணி இசை என அனைத்தும் தனி ஒருவன் படத்தை ரசிகர்களால் கொண்டாட வைத்தது. இன்னொரு பக்கம் சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி செம்ம ஸ்டைலிஷாக கூஸ்பம்ப் பெர்ஃபாமன்ஸ் செய்திருந்தார். தனி ஒருவன் படத்தின் ஹைலைட்டாக அரவிந்த் சாமியின் வில்லத்தனம் அமைந்திருந்தது. ஆனால், தனி ஒருவன் க்ளைமேக்ஸில் அரவிந்த் சாமி உயிரிழந்துவிடுவதாக படத்தை முடித்திருப்பார்.

 Thani Oruvan 2: Fahadh Faasil or Abhishek Bachchan as the Villain role in Thani Oruvan 2

இந்நிலையில், தற்போது தனி ஒருவன் 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் மோகன் ராஜா. இந்தப் படத்தின் ப்ரோமோ கடந்த மாதம் இறுதியில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா நடிக்க, மோகன் ராஜா இயக்கவுள்ளார். தனி ஒருவன் முதல் பாகத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, நயன்தாரா, மோகன் ராஜா மூவரும் இரண்டாம் பாகத்திலும் இணைந்துவிட்டனர். இதில் அரவிந்த் சாமி மட்டும் மிஸ்ஸிங் ஆகிவிட்டார்.

அதேபோல், தனி ஒருவன் 2 ப்ரோமோவில் "எதிரி தான் உன்னைத் தேடி வருவான்" என ஜெயம் ரவிக்கு லீட் கொடுத்திருந்தார் இயக்குநர் மோகன் ராஜா. இதனால் தனி ஒருவன் 2-வில் வில்லன் கேரக்டர் செம்ம வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அரவிந்த் சாமியை போல இன்னொரு தரமான வில்லனை தேடி வருகிறார் மோகன்ராஜா.

 Thani Oruvan 2: Fahadh Faasil or Abhishek Bachchan as the Villain role in Thani Oruvan 2

அதன்படி அவரின் முதல் சாய்ஸ்ஸாக ஃபஹத் பாசில் இருப்பதோடு, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. விக்ரம், மாமன்னன் என தமிழில் வெரைட்டியான கேரக்டர்களில் நடித்துள்ள ஃபஹத் பாசிலுக்கு, தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஃபஹத் கமிட்டாகவில்லை என்றால், பாலிவுட்டில் இருந்து அபிஷேக் பச்சனை களமிறக்கலாம் என மோகன் ராஜா முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X