’தல’ எனும் சொல்லுக்கே அர்த்தத்தை தந்தவரு.. அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்!

சென்னை: அல்டிமேட் ஸ்டாரை 'தல' அஜித்தாக மாற்றிய பெருமை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்குத்தான் போய் சேரும். தீனா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாக உள்ள நிலையில் அது தொடர்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சோசியல் மீடியா முழுவதும் அஜித் ரசிகர்களின் அலப்பறை அதிக அளவில் கிளம்பியுள்ளது.

Thank you Ajith sir for defining Thala - AR Murugadoss sends super birthday wish to Ajith Kumar

அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் திரையரங்குகளில் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர்.

சன் நெக்ஸ்ட்டில் மங்காத்தா: அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் சன் நெக்ஸ்டில் இன்று மங்காத்தா திரைப்படத்தை எந்த ஒரு கட்டணமும் இன்றி கண்டு ரசிக்கலாம் என சன் நெக்ஸ்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் மங்காத்தா படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தீனா ரீ ரிலீஸ்: கடந்த இரண்டு வாரங்களாக விஜய் நடித்து வெளியான கில்லி படத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் தியேட்டரில் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் இன்று முதல் அஜித் ரசிகர்கள் தீனா படத்தை அப்படி கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் வாழ்த்து: கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படத்திற்கு பிறகு தான் நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் 'தல' என பாசமாக அழைத்தனர். தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்கிற வசனம் எல்லாம் அந்த படத்தில் இடம் பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்நிலையில் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தீனா திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ள நிலையில், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள முருகதாஸ் உழைப்பாளர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தல என்பதற்கு அர்த்தம்: எதிலும் முதன்மையானவர் என்பதை தான் 'தல' என்கிற சொல் குறிக்கும். அந்த 'தல' டைட்டிலுக்கு எப்போதுமே பொருத்தமானவர் நீங்க தான் என அஜித்தை முருகதாஸ் பாராட்டியுள்ளார். தீனா படத்துக்கு பிறகு அஜித்தை இயக்கும் வாய்ப்பு முருகதாசுக்கு கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன், சல்மான் கான் படங்களை முடித்து விட்டு மீண்டும் அஜித்துக்கு ஒரு படம் அவர் பண்ண வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X