என் வார்த்தைகளை ஃபாலோ பண்றீங்கன்னு பெருமையா இருக்கு விஜய் அண்ணா: தல ரசிகை ஃபீலிங்

By Siva

சென்னை: என் வரிகளை நீங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதை நினைத்து பெருமையாக இருக்கிறது விஜய் அண்ணா என்று அஜித் ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பன்ச் மேல் பன்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை அசத்திவிட்டார். உசுப்பேத்துறப்ப உம்முன்னும், கடுப்பேத்துறப்ப கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று விஜய் தெரிவித்தார்.

இது என் வார்த்தைகள் இல்லை, யாரோ சொன்னது ஆனால் நன்றாக உள்ளதால் பின்பற்றுகிறேன் என்றார் விஜய்.

தல ரசிகை

விஜய் பேசியதை பார்த்த கயல்விழி என்ற தல ரசிகை ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "என்னோட லைன்ஸ் தான் அண்ணா அந்த டிவிட் ...என்னோட லைன்ஸ பாலோவ் பண்றீங்கனு நினைக்கும் போது ரொம்ப கர்வமா இருக்கு ...வாழ்த்துகள் அண்ணா @actorvijay
(குறிப்பு ; டிவிட் கமெண்டில் பார்க்கவும் )' என்றார்.

ட்வீட்

விஜய் பேசிய வசனத்தை கயல்விழி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டை எடுத்து அவர் கமெண்ட்ஸ் பாக்ஸில் போட்டுள்ளார்.

கொஞ்சம் ஓவராக இருக்கே

நாங்க என்ன பேசனும்னு நாங்க தான் முடிவு பண்ணனும் நீங்க என்ன பேசனும்னும் நாங்க தான் முடிவு பண்ணனும் #தலஃபேன்ஸ் #SarkarAudioLaunch @actorvijay என்று கயல்விழி ட்வீட்டியது கொஞ்சம் ஓவராக தெரிகிறதே.

காப்பி

மேடம் நீங்களே வேறு ஒருவருடைய ட்வீட்டை காப்பி பேஸ்ட் செய்துவிட்டு இதில் பெருமை வேறா என்று தளபதி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த முதல்வர்

கயல்விழியின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர் ஒருவரோ, அப்போ நீங்க தான் அடுத்த முதல்வரா அக்கா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X