twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தங்கரின் அழகிக்கு வயது 20... திரைப்பட வரலாற்றில் அழகி... தங்கர் பச்சான் உருக்கம்

    |

    சென்னை : தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற படம் அழகி.

    பள்ளிக் கூட காதலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் கவிதையாக அமைந்திருந்தது.

    இந்நிலையில் தற்போது அழகி வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துள்ளது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் உருக்கம் தெரிவித்துள்ளார்.

    MOVIE REVIEW : இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்த MOVIE REVIEW : இரட்டை வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்த

    இயக்குநர் தங்கர் பச்சான்

    இயக்குநர் தங்கர் பச்சான்

    ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர்பச்சான், அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட சிறப்பான பல படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். நீண்ட காலங்களாக இயக்கத்தை தொடாமல் இருந்த இவர் சமீபத்தில் தனது மகனை வைத்து படம் இயக்கி வருகிறார்.

    மகனை வைத்து படம்

    மகனை வைத்து படம்

    பள்ளிக் காதலை மையமாக வைத்து படங்களை இயக்கிய தங்கர் பச்சான், தனது மகன் விஜித்தை வைத்து டக்கு முக்கு டிக்கி தாளம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனது மகனின் முதல் படத்திலேயே அவரை காமெடியில் களமிறக்கியுள்ளார் தங்கர் பச்சான்.

    சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை

    மாறுபட்ட கதையம்சங்களுடன் சிறப்பான திரைக்கதையுடன் களமிறங்குபவர் தங்கர் பச்சான். இவரது அழகி படம் கவிதையாக அமைந்திருந்தது. பள்ளிக் கால காதல் திருமணத்திற்கு பின்பு மீண்டும் தோன்றினால் என்னவாகும் என்பதை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

    அழகி படம்

    அழகி படம்

    பார்த்திபன், தேவயாணி மற்றும் நந்திதா தாஸ் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இந்தப் படத்தில் ஆழமான பள்ளிக் காதல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நம் அனைவருக்குள்ளும் இருக்கும் பள்ளிக் காதலை தூண்டும் வகையில் இந்த பிளாஷ்பேக் அமைந்திருந்தது.

    Recommended Video

    இயக்குநர்கள், நடிகர்கள் இணைந்து ஆரம்பித்த தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை!
    20 ஆண்டுகளை கடந்த அழகி

    20 ஆண்டுகளை கடந்த அழகி

    இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்கரின் அழகிக்கு 20 வயது என்றும் 20 ஆண்டுகள் உருண்டோடியதை நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தங்கர் பச்சான் மகிழ்ச்சி

    தங்கர் பச்சான் மகிழ்ச்சி

    மேலும் அழகியின் தாக்கத்தை நினைவுகளை தினந்தோறும் யாரேனும் பகிர்கின்றனர் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.

    English summary
    Azhagi movie crosses 20 years and Director Thankar bachan shares his memories
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X