»   »  தேள் கொட்டிய திருடர்கள்! - தங்கர் பச்சான்

தேள் கொட்டிய திருடர்கள்! - தங்கர் பச்சான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்மைப் பாதுகாக்கத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என எண்ணியபோது நமக்குத் தெரியாத வழிகளில் திருடினார்கள்!

பின், நம்மை பாதுகாக்கிறோம் என சொல்லிக்கொண்டே நம்மிடமிருந்து திருடியதிலிருந்தே நமக்கு பங்கு கொடுத்தார்கள்!

Thankar Bachan's comment on present politics

நாமும் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டோம்!

இப்போது அந்தத் திருடர்கள் நம் வீட்டையே சொந்தமாக்கிக் கொண்டார்கள்!

எனவே நம் வீட்டு சாவி இப்போது அவர்கள் கையில் என்பதால் விரும்பியதையெல்லாம் திருடிக்கொள்ளலாம்!

கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத்தெரிந்தும் நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

திருடியதிலிருந்து பங்கு வாங்கியவர்கள் என்பதால் யாரிடத்திலும் போய் முறையிடவும் முடியவில்லை!

முறையிட்டாலும், நடவடிக்கை எடுப்பான் என நினைப்பவனும் பெரிய திருடனாக இருக்கிறான்.

நாம் இப்போது என்ன செய்வது? இதுதான் ஒவ்வொருவரின் கேள்வியும்!

தேள் கொட்டி விட்டால் திருடன் கத்த முடியுமா? அதுதான் தற்போதைய நிலை!

எல்லாவற்றையும் பறி கொடுத்தாலும் நாளையும் இருப்பதிலேயே பெரியத் திருடனாகப் பார்த்துதான் அவர்களையே காவல் வைப்போம்!

ஏனென்றால் நாம் எல்லாம் தெரிந்தவர்கள்.

- தங்கர் பச்சான்

English summary
Thankar Bachan's article on present political situation in Tamil Nadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil