»   »  தங்கர் விவகாரம்: விஜயகாந்த், மனோரமா மீது மனித உரிமை மீறல் விசாரணை மதுரை:இயக்குனர் தங்கர்பச்சானை வலுக்கட்டாயமாக நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாகநடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், குண்டு கல்யாணம் மற்றும் நடிகை மனோரமா ஆகியோர் மீது மாநில மனித உரிமைகள்ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என மதுரை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தமிழ்ச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மனோகரன் மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், நடிகைகள் பற்றி தவறான ஒரு கருத்தைத்தெரிவித்தார். இதற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து தங்கர்பச்சான் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் மன்னிப்பு கேட்டார்.ஆனால் அதன் பின்பும், படப்பிடிப்பில் நடிகர்கள் கலந்து கொள்ளக் கூடாது, தங்கர்பச்சான் படத்திற்கு யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று கூறி நடிகர் சங்கம் தடை விதித்தது. ஸ்டிரைக் அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டனர்.இதன் மூலம் தங்கர்பச்சானை தொழில் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும், நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர்தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து நடிகை மனோரமா காலில் விழ வைத்தனர்.அப்போது மனோரமாவும், நடிகர் குண்டுகல்யாணமும் (இவர் அதிமுகவின் பிரச்சார பீரங்கியாவார்) தங்கர்பச்சானைமிரட்டியுள்ளனர்.தங்கர்பச்சான் சட்ட விரோதமாக பேசியிருந்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல்வலுக்கட்டாயமாக வரவழைத்து, காலில் விழ வைத்து, அழ வைத்து மிரட்டியதன் மூலம் 4 பேரும் மனித உரிமை பாதுகாப்புசட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளனர்.எனவே விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.மனுவைப் பரிசீலித்த நீதிபதி சீதாராமன், இந்த நிகழ்ச்சியில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதுஉறுதியாகிறது. எனவே இதை மனித உரிமை ஆணையம் விசாரிக்கலாம். இந்த மனு மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

தங்கர் விவகாரம்: விஜயகாந்த், மனோரமா மீது மனித உரிமை மீறல் விசாரணை மதுரை:இயக்குனர் தங்கர்பச்சானை வலுக்கட்டாயமாக நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாகநடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், குண்டு கல்யாணம் மற்றும் நடிகை மனோரமா ஆகியோர் மீது மாநில மனித உரிமைகள்ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என மதுரை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தமிழ்ச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மனோகரன் மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், நடிகைகள் பற்றி தவறான ஒரு கருத்தைத்தெரிவித்தார். இதற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து தங்கர்பச்சான் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் மன்னிப்பு கேட்டார்.ஆனால் அதன் பின்பும், படப்பிடிப்பில் நடிகர்கள் கலந்து கொள்ளக் கூடாது, தங்கர்பச்சான் படத்திற்கு யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று கூறி நடிகர் சங்கம் தடை விதித்தது. ஸ்டிரைக் அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டனர்.இதன் மூலம் தங்கர்பச்சானை தொழில் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும், நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர்தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து நடிகை மனோரமா காலில் விழ வைத்தனர்.அப்போது மனோரமாவும், நடிகர் குண்டுகல்யாணமும் (இவர் அதிமுகவின் பிரச்சார பீரங்கியாவார்) தங்கர்பச்சானைமிரட்டியுள்ளனர்.தங்கர்பச்சான் சட்ட விரோதமாக பேசியிருந்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல்வலுக்கட்டாயமாக வரவழைத்து, காலில் விழ வைத்து, அழ வைத்து மிரட்டியதன் மூலம் 4 பேரும் மனித உரிமை பாதுகாப்புசட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளனர்.எனவே விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.மனுவைப் பரிசீலித்த நீதிபதி சீதாராமன், இந்த நிகழ்ச்சியில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதுஉறுதியாகிறது. எனவே இதை மனித உரிமை ஆணையம் விசாரிக்கலாம். இந்த மனு மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இயக்குனர் தங்கர்பச்சானை வலுக்கட்டாயமாக நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது தொடர்பாகநடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், குண்டு கல்யாணம் மற்றும் நடிகை மனோரமா ஆகியோர் மீது மாநில மனித உரிமைகள்ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என மதுரை நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தமிழ்ச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மனோகரன் மதுரை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், நடிகைகள் பற்றி தவறான ஒரு கருத்தைத்தெரிவித்தார். இதற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து தங்கர்பச்சான் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் அதன் பின்பும், படப்பிடிப்பில் நடிகர்கள் கலந்து கொள்ளக் கூடாது, தங்கர்பச்சான் படத்திற்கு யாரும் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று கூறி நடிகர் சங்கம் தடை விதித்தது. ஸ்டிரைக் அறிவிப்பையும் அவர்கள் வெளியிட்டனர்.

இதன் மூலம் தங்கர்பச்சானை தொழில் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும், நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர்தங்கர்பச்சானை நடிகர் சங்கத்திற்கு வலுக்கட்டாயமாக வரவழைத்து நடிகை மனோரமா காலில் விழ வைத்தனர்.

அப்போது மனோரமாவும், நடிகர் குண்டுகல்யாணமும் (இவர் அதிமுகவின் பிரச்சார பீரங்கியாவார்) தங்கர்பச்சானைமிரட்டியுள்ளனர்.

தங்கர்பச்சான் சட்ட விரோதமாக பேசியிருந்தால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல்வலுக்கட்டாயமாக வரவழைத்து, காலில் விழ வைத்து, அழ வைத்து மிரட்டியதன் மூலம் 4 பேரும் மனித உரிமை பாதுகாப்புசட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளனர்.

எனவே விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி சீதாராமன், இந்த நிகழ்ச்சியில் மனித உரிமை மீறல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதுஉறுதியாகிறது. எனவே இதை மனித உரிமை ஆணையம் விசாரிக்கலாம். இந்த மனு மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil