Dhanush: நீங்க இல்லைனா.. மாமன்னன் படமே இல்லை.. தனுசுக்கு உதயநிதி சொன்ன பெரிய நன்றி.. ஏன் தெரியுமா?

சென்னை: மாமன்னன் படத்துக்கு முதல் நபராக பாசிட்டிவ் விமர்சனத்தை தனுஷ் கொடுத்த நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

அமைச்சராக மாறி முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்து இருந்தார்.

ஏஞ்சல் எனும் படத்தில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தை முடித்துக் கொடுக்காமலே மாமன்னன் படத்தைத் தனது கடைசி படம் என அறிவித்ததை எதிர்த்து ஏஞ்சல் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றும் போட்டது. ஆனால், அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

Thanks for everything Dhanush - Udhyanidhi Stalin appreciates Dhanush for Maamannan

ஹைப் ஏற்றிய தனுஷ்: உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜுக்காக டிக்கெட் புக் பண்ணவில்லை என் தனுஷ் படம் நல்லா இருக்கு என பாராட்டியதால் புக் செய்கிறேன் என பல ரசிகர்கள் மாமன்னன் படத்திற்கு டிக்கெட் புக் செய்து வருவதாக பதிவிட்டு வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்த தனுஷ் நாளை வெளியாகவுள்ள மாமன்னன் படம் சிறப்பாக உள்ளது என கொடுத்த முதல் விமர்சனம் தான் தற்போது ஏகப்பட்ட நெகட்டிவ் ட்ரோல்களை கடந்து அந்த படத்திற்கான ஹைப்பை சற்றே ஏற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நன்றி: தனுஷ் மாமன்னன் படம் நல்லா இருக்கு, இடைவேளை காட்சி தியேட்டரே தெறிக்கும் என போஸ்ட் போட்ட நிலையில், உடனடியாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், எல்லாத்துக்கும் நன்றி தனுஷ்.. நீங்க இல்லைன்னா மாமன்னன் படமே உருவாகி இருக்காது என ட்வீட் போட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஆச்சர்யமாக போய்விட்டது. மாமன்னன் படத்துக்கு தனுஷ் என்ன உதவி செய்திருக்கிறார் என்றும், ஒருவேளை கேமியோ ரோலில் நடித்துள்ளாரா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தனுஷ் இல்லைன்னா: கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து தனுஷ் தான் படம் பண்ண வேண்டியதாக இருந்ததாம். ஆனால், உதயநிதி ஸ்டாலின் இது என்னோட கடைசி படமாக இருந்தால் நல்லா இருக்கும் என கேட்ட உடனே தனுஷ் அந்த படத்தை விட்டுக் கொடுத்து விட்டார். இதனால், தான் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தையே இயக்க முடிந்தது என்கின்றனர்.

தனுஷுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் பலரும் மாமன்னன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X