இளையராஜாவை டிஸ்சார்ஜ் செய்து வடிவேலுவை அட்மிட் பண்ணியாச்சு

By Siva

Recommended Video

Actor Vadivelu interview: வடிவேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்கள்- வீடியோ

சென்னை: வடிவேலு அளித்த பேட்டியால் இசைஞானி இளையராஜாவை மக்கள் மறந்துவிட்டனர்.

தன் பாடல்களை தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஆளாளுக்கு அவரை விமர்சித்தனர். ராஜா சாருக்கு தலைக்கனம், ஆணவத்தில் ஆடுகிறார் என்றெல்லாம் விளாசினார்கள்.

Thanks to Vadivelu: Netizens forget Ilaiyaraja

ராஜா சார், தயவு செய்து இனி பேட்டி கொடுக்காதீர்கள். உங்களின் இசை மூலம் மட்டுமே பேசுங்கள். அது தான் நல்லது என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இளையராஜாவை நெட்டிசன்கள் தினமும் சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தான் நேசமணி டிரெண்டான குஷியில் பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவன் ஆகியோரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினார். ஷங்கருக்கெல்லாம் என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். அவரின் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் இளையராஜாவை விட்டுவிட்டு வடிவேலுவை வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டனர்.

வடிவேலுவுக்கு படங்கள் கிடைக்காத காட்டத்தில் பேசுகிறார். திறமை இருக்கிறது என்பதற்காக அகந்தையில் ஓவராக ஆட்டம் போடுகிறார் வடிவேலு. இப்படி ஆடியவர்கள் அடையாளம் தெரியாமல் போனது பல முறை நடந்துள்ளது. அதை எல்லாம் பார்த்தும் கூட வடிவேலு தலைக்கனமாக பேசுவது சரியில்லை என்று சமூக வலைதளங்கள் பக்கம் போனாலே வடிவேலுவை தான் திட்டுகிறார்கள்.

இதற்கிடையே திரையுலக பிரபலங்களும் வடிவேலுவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். வடிவேலு ஹீரோவாக நடித்து பெரிய ஹிட்டான ஒரே படம் 23ம் புலிகேசி என்பதை அவர் மறந்துவிட வேண்டாம். அவர் சொல்வது போன்று அவருக்கு அவ்வளவு விஷயம் தெரிந்திருந்தால் அவர் ஹீரோவாக நடித்த பிற படங்கள் ஏன் ஓடவில்லையாம் என்று கோடம்பாக்கத்தில் விமர்சிக்கிறார்கள்.

நேசமணிக்கு சுத்தியல் தலையில் விழுந்து 18 ஆண்டுகள் கழித்து சித்தம் கலங்கிவிட்டது. அதனால் தான் பிதற்றிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சிக்கிறார்கள். எது எப்படியோ, இளையராஜா சொன்ன ஆண்மையில்லாதனத்தை நெட்டிசன்கள் மறந்தே போய்விட்டார்கள். அதற்கு முழு காரணம் வடிவேலு.

ஆண்மையில்லாத்தனம் வார்த்தையை மறந்துவிட்டு அகந்தை, ஆணவம், அகம்பாவம் என்று நெட்டிசன்களை பேச வைத்துவிட்டார் வடிவேலு. வடிவேலுவின் இமேஜ் இப்படி டேமேஜ் ஆவதை பார்த்து அவரின் ரசிகர்களுக்கு தான் வருத்தமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X