'தன்னாலே வெளிவரும் தயங்காதே'... நான்கு இயக்குனர்கள் சொல்லும் புதுக்கதை!

தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்.

Recommended Video

சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே- வீடியோ

சென்னை: சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே திரைப்படம்.

ட்ராகன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ரகு பாலன் தயாரிப்பில் மற்றும் மேனுவல் பெனிட்டோ ஒய்.ரோல்டன் இணைத்தயாரிப்பில் பாஸ்கர் இயக்கும் படம் "தன்னாலே வெளிவரும் தயங்காதே".

Thannale velivarum thayangathe

இப்படத்தில் நாயகனாக ரகுபாலன் மற்றும் நாயகியாக ஆஷிக்கா நடித்துள்ளனர். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் , மகாநதி சங்கர், ரஞ்சன், ஜெயசூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜோஷி சேவியர் கதை எழுதியுள்ளார். சாதிக் ஹாசன் இசையமைக்க, கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டென்னிஸ் சிக்ஸ்டஸ் கலை இயக்கத்தையும், பிரேம் படத்தொகுப்பு பணியையும் செய்துள்ளனர். ரவி தேவ் நடனமைக்க, பம்மல் ரவி, நோபர்ட் எரிக் ஆகியோர் சண்டைப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகியுள்ளார் பாஸ்கர்.

இப்படத்தின் கதையைப்பற்றி இயக்குனர் கூறியதாவது, " நான்கு உதவி இயக்குனர்கள் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள், அதே நேரம் அந்த காவல் துறையின் விசாரணையில் ஒவ்வொரு உதவி இயக்குனரும் ஒரு கதை சொல்கிறார்கள். இவர்கள் கூறும் கதை கடத்தப்பட்ட தம்பதியினரை கண்டுபிடிக்க உதவியாக இருக்கிறது. இந்த தம்பதிகள் ஏன் கடத்தப்பட்டார்கள்..? எதற்கு கடத்தப்பட்டார்கள்..? என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக கூறுவதே தன்னாலே வெளிவரும் தயங்காதே" என்று கூறியுள்ளார்.

Thannale velivarum thayangathe

இப்படத்தின் படபிடிப்பு சென்னை,கோவை, பாண்டிசேரி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X