கொட்டும் மழையிலும் வசூலை அள்ளும் தண்ணீர் மாதன் தினங்கள்

சென்னை: தமிழ் திரையுலகில் கோடிகளை கொட்டி படம் எடுத்தாலும் எதிர்பார்க்கும் வசூல் கிடைக்காத நிலையில், மலையாள திரையுலகில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தண்ணீர் மாதன் தினங்கள் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

இப்போது கேரளாவில் வருண பகவான் மழையை வாரி வாரி கொடுத்தாலும் மக்கள் திரையரங்கிற்கு செல்வது கொஞ்சமும் குறையவில்லை. எதிர் நீச்சல் அடித்தாவது புதிதாக வெளியாகும் திரைப்படத்தை கண்டுகளிக்கிறார்கள்.

Thanneer Mathan Dinangal movie collection Rs.50 Crore

அப்படி மக்கள் கூட்டத்தால் வெற்றிவாகை சூடியுள்ள திரைப்படம் தான் தண்ணீர் மாதன் தினங்கள். சிறிய பட்ஜெட் படமாக இருப்பினும் வசூலை அள்ளி குவித்திருக்கிறது இந்த மலையாள படம். இதை அப்படக் குழுவினரே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

உருப்படியாக கதை என்ற ஒன்று இல்லாமல், வெறும் முன்னணி நடிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு 100 அல்லது 200 கோடிகளை கொட்டி படம் எடுத்து வெளியிட்டாலும், அதில் கதையும், பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களும் இல்லை என்றால் படம் ஓடாது.

அதற்கு மாறாக மக்களின் மனதை அசைத்துப் பார்க்கும் கதையம்சம் உள்ள படங்களை சில லட்சங்களிலோ அல்லது ஒரு கோடியிலோ செலவழித்து எடுத்தால் போதும், படம் வசூலை கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்பதை உறுதி செய்யும் படம் தான் தண்ணீர் மாதன் தினங்கள்.

Thanneer Mathan Dinangal movie collection Rs.50 Crore

நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் தவிர மற்ற அனைவரும், இயக்குனர் உட்பட புதுமுகங்களாக இருப்பினும் இப்படம் வெளியாகிய இரண்டே வாரங்களில் சாதனை படைத்துள்ளது. என்ன சாதனை தெரியுமா, 2 கோடி ரூபாய் செலவில் படத்தினை உருவாக்கி 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது இப்படம். அடேயப்பா.

இங்கு நம் தமிழ் திரையுலகிலோ 50 கோடிகளை அசால்ட்டாக செலவு செய்து படம் எடுத்து விட்டு அதில் ஒரு 10 சதவீதம் கூட வசூல் செய்ய முடியவில்லையே என்று புலம்பி கொண்டிருக்கும் நிலையில் மலையாள திரையுலகில் இது ஒரு மிகப் பெரிய சாதனையே.

சிறிய பட்ஜெட் படங்கள் அழிந்து வருகின்றன என்று நாம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மலையாள சிறிய பட்ஜெட் படம் வசூலை வாரி குவித்திருக்கிறது.

தண்ணீர் மாதன் தினங்கள் எனும் இப்படம் பள்ளி பருவ மாணவர்கள் மற்றும் அவர்களது பள்ளி காலங்களில் நடக்கும் இயற்கையான நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம்.

எப்போதும் கையாளும் நுட்பமாக இல்லாமல் ஒரு புதிய முறையில் வித்தியாசமான முறையில் படத்தை கொண்டு செல்வதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இப்படம். பொறுத்திருந்து பார்ப்போம் யார் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வெற்றி வாய்ப்பை சுடப்போகிறார்கள் என்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X