Don't Miss!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- News
சட்டசபை வீடியோ பதிவு.. ஆளுநரின் விருந்தினர் மீது பாயும் நடவடிக்கை? உரிமை குழு பரபர ஆலோசனை..அதிரடி
- Lifestyle
இத யூஸ் பண்ணி நீங்க சுயஇன்பம் செய்றீங்களா? அது ஆபத்தானதாம்... பின்ன எப்படி செய்யுனும் தெரியுமா?
- Sports
மகளிர் ஐபிஎல் - 5 அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ. 4670 கோடி வருமானம்.. எந்த அணிகள் வாங்கியது.. விவரம்
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
தம்பி ராமைய்யா உடல் முழுக்க விஷம்... கண்டிப்பா கேஸ் போடுவேன்... கதறும் தயாரிப்பாளர்
சென்னை : தயாரிப்பாளர் சரணவனின் உருவாக்கத்தில் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் தண்ணி வண்டி.
மாணிக்க வித்யா இயக்கியுள்ள படத்திற்கு மோசஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் தம்பி ராமைய்யா குறித்து தயாரிப்பாளர் தனது ஆத்திரத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
சாணியில்
குளிப்பதெல்லாம்
டாஸ்க்கா...
கடுப்பாகும்
நெட்டிசன்கள்

தண்ணி வண்டி படம்
நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி, தாமனி, தம்பி ராமைய்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் தண்ணி வண்டி. படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.

சிறப்பான உமாபதி
படத்தில் உமாபதி சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள அனுபவம் அவருக்கு கைக்கொடுத்துள்ளது. படத்தில் தம்பி ராமைய்யாவின் மகனாகவே அவர் நடித்துள்ளார். சண்டைக் காட்சிகள், காமெடி அனைத்திலும் அவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரமோஷனில் பங்கேற்காத உமாபதி
இந்நிலையில் அவர் படத்தின் பிரமோஷன் பணிகளில் அவர் பங்கேற்காதது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். படம் சிறப்பாக வெளிவந்துள்ள நிலையில், பிரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தால் படத்திற்கு மேலும் சிற்பபான வரவேற்பு கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகனின் வாழ்க்கையை கெடுக்கும் தம்பி ராமையா
தம்பி ராமைய்யா தனது மகளின் வாழ்க்கையை கெடுத்து வருவதாகவும் அவர் உதட்டில் புன்னகையையும் உடல் முழுவதும் விஷத்தையும் வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். உமாபதியை தற்போதே முன்னணி நாயகர் போல அவர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்றரை கோடி ரூபாய் நஷ்டம்
தனக்கு இந்தப் படத்தின் மூலம் மூன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தான் இது தொடர்பாக தம்பி ராமையாவிற்கு எதிராக வழக்கு போட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தான் தன்னுடைய குடும்பத்தை துபாயில் விட்டுவிட்டு 10 மாதங்கள் இந்த படத்திற்காக இங்கு கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மற்றொரு தயாரிப்பாளருக்கு சிபாரிசு
13 வருடங்கள் கழித்து தான் இந்தப் படத்தை தயாரிக்க வந்துள்ளதாகவும் ஆனால் தம்பி ராமையா மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் இணைந்து படத்தை தயாரிக்க அவர் மற்றொருவரை சிபாரிசு செய்ததாகவும் தான் அதற்கு இணங்காததால் தனக்கு பிரச்சினை கொடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வில்லி கேரக்டருக்கு முக்கியத்துவம்
மேலும் படத்தில் வில்லி கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு தனது மகனின் கேரக்டர் டம்மி செய்யப்பட்டுள்ளதாக தம்பி ராமையா குற்றம் சாட்டியதாகவும் ஆனால் அவர் படத்தை பார்க்காமலேயே இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.