செல்ஃபியால் வரும் பிரச்சினைகளைச் சொல்ல ஒரு படம்.. அதுதான் தந்திர புன்னகை..!
இன்றைக்கு செல்ஃபி எனும் தன்னைத் தானே அல்லது தங்களைத் தாங்களே செல்போனில் படமெடுத்துக் கொள்ளும் கலாச்சாரம் பிரபலமாகிவிட்டது.
இந்த செல்ஃபியால் ஒரு பெண் படும் பாட்டை படமாக எடுக்கிறார்கள். படத்துக்குப் பெயர் தந்திர புன்னகை.

உண்மைச் சம்பவம்...
படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கிறார்களாம்.

செல்ஃபி வீடியோ
ஒரு இளம் பெண் ஆண் நண்பர்களுடன் யதார்த்தமாக ஒரு வீடியோ எடுத்துக் கொள்கிறாள், செல்போனில். அப்படி எடுக்கப்படும் ஒரு பெண்ணுடைய தவறான வீடியோவால் அவளின் குடும்பமும் எதிர்காலமும் எப்படி பாதிப்படைகிறது என்பதே இப்படத்தின் கதை ..

விலாவாரியாக
ஆண் நண்பர்களுடன் பெண்கள் யதார்த்தமாக எடுக்கப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் எப்படி பிரச்சினைகளைக் கொண்டு வரும் என்பதை விலாவாரியாகச் சொல்கிறார்களாம்.

தனுஷ் பாண்டியன்
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. தனுஷ் பாண்டியன் இயக்குகிறார். மோகா ஜி இசையமைக்கிறார். விவேக் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











