நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை.. பிரபல சீரியல் நடிகைகள் ஸ்ரீ துர்கா, நீபா ஜாலி பேட்டி!
சென்னை: பிரபல சீரியல் நடிகைகளான ஸ்ரீ துர்கா மற்றும் நீபா அளித்துள்ள ஜாலி, கேலி பேட்டி வைரலாகி வருகிறது.
வெப்சீரிஸ்கள், திரைப்படங்கள் ஒடிடி தளத்தில் வரும் போது, சீரியல்கள் மட்டும் வரக் கூடாதா? என்கிற முயற்சியில், ஜி5 ஒரிஜினலாக உருவாகி உள்ள "தந்துவிட்டேன் என்னை" சீரியலில் நடித்துள்ள ஸ்ரீ துர்கா மற்றும் நீபாவின் க்ளோஸ் கால் பேட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை பெற்றுள்ள நடிகை ஸ்ரீ துர்கா, நான் லூசு தான்.. ஆனால், அவ்ளோ லூசு இல்லை என தனது கதாபாத்திரம் குறித்து வெளிப்படையாக சொல்லாமல், கொஞ்சம் ட்விஸ்ட் வைத்து மறைமுகமாக கூறினார்.
ஆனால், நடிகை நீபாவோ 6 மாமியார்களிடம் சிக்கித் தவிக்கும் ஒரு நபரின் கதை என பக்கா ப்ளூ பிரின்ட்டை போட்டு உடைத்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய நீபா இனி தொடர்ந்து ரசிகர்களுக்காக நடிப்பாரா? என்ற கேள்விக்கு கண்டிப்பா என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

ஸ்ரீ துர்கா பேசும் போது, இது சாதாரணமாக சீரியல் போல இருக்காது. திரைப்படத்திற்கு போடப்படுகிற அத்தனை எஃபோர்ட்களையும் இயக்குநர் இதில் கொட்டி உள்ளார். தேவையில்லாத அழுகை சீன்கள் இருக்காது. இந்த கதைக்கு எது தேவையோ அதை மட்டுமே கொடுத்து சுவாரஸ்யப்படுத்தி உள்ளார் இயக்குநர் என பாராட்டி உள்ளார்.
சின்னத்திரை நடிகைகள் நீபா மற்றும் ஸ்ரீ துர்காவின் இந்த கலகல பேட்டியை கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications