GOAT: அரே.. ஏமிரா இதி! தெலுங்கில் படுதோல்வியைச் சந்தித்த கோட்.. நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா?
ஹைதராபாத்: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர்.
படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோல் முதல் நான்கு நாட்களில் படம் ரூபாய் 288 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மழை பொழிந்து வருகின்றது என பேச்சுகள் அதிகம் இருக்கும்போது, கோட் படத்தினால் நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 386 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், முதல் வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என நம்பப் பட்டது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என பேச்சுகளும் எழுந்தது. ஆனால் படம் தமிழ் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் பெரிதாக எடுபடவில்லை என பேச்சுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டினை அடுத்து கேரளாவில்தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் அங்கும் படம் பெரிய ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. இதனால் படத்தின் வசூல் ஹப்பாக தமிழ்நாடு மாறியது. வெளி நாடுகளிலும் படம் பெரிய வரவேற்ப்பைப் பெறவில்லை. ஹிந்தியில் படத்தை மல்டி ஃப்ளக்ஸ்களில் ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் ஓடிடி ரிலீஸ். இப்படியான நிலையில், தென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டினைக் கொண்ட சினிமா வுட்கள் என்றால், அதில் தெலுங்கு சினிமாவும் இருக்கும்.

எடுபடவில்லை: கோட் படம் தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மகேந்திர சிங் தோனி என சி.எஸ்.கேவுக்கு ஓவர் அட்வாண்டேஜ் கொடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகின்றது. மேலும், படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பெரும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. இதனாலும் படத்தின் வசூல் குறைந்ததாக கூறப்படுகின்றது.

எத்தனை கோடி நஷ்டம்: கோட் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் மட்டும் ரூபாய் 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் படம் மிகவும் சுமாராகவே ஓடியதால் இதுவரை சுமார் ரூபாய் 2.5 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது என கூறப்படுகின்றது. இதனால் ரூபாய் 13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்தத் தகவலை பிரதான ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. தமிழில் மட்டுமே படம் ஓரளவுக்கு வசூல் செய்துள்ளது.



Click it and Unblock the Notifications











