»   »  'தபால்காரன்'.... புதிய படத் தொடக்க விழா!

'தபால்காரன்'.... புதிய படத் தொடக்க விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓர் அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் புதிய படம் ஒன்று உருவாகிறது. படத்தின் தலைப்பு 'தபால்காரன்'.

இப்படத்தை டி.உதயகுமார் இயக்குகிறார். இவர் 'கேடயம் ', 'அழைப்பிதழ்' படங்கள் இயக்கிய ராஜ்மோகனின் உதவியாளர். 'வானம்' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.

Thapalkaran movie launch

ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் 'தபால்காரன்' படததைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் 'படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார்.

'லொள்ளு சபா' சாமிநாதன். பேராசிரியர் ஞானசம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், 'எங்கேயும் எப்போதும்' வினோதினி, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- ஜி.செல்வகுமார், இசை- நீரோ பிரபாகரன், எடிட்டிங் சங்கர்.

Thapalkaran movie launch

''வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப் படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.

இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கும். இது ஒரு முழுநீள வணிகப் படம் பொழுது போகிற போக்கில் சமூகக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும்,'' என்கிறார் இயக்குநர்.

இப்படத்தின் பூஜை தொடக்கவிழா நேற்று போரூரில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

English summary
The launch of Thapalkaran, a new movie based on post office was held on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil