GOAT Vijayakanth : கோட் படத்தில் கேப்டன் லுக் இதுவா.. கேப்டன் ரசிகர்களே தயாரா?

சென்னை: நடிகர் விஜய் (Vijay) இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் தழ்மிநாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதேபோல் படம் தமிழ் திரையுலகில் முதல் நாளில் வசூலில் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியால் மறைந்த நடிகர் விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி கோட் படத்தில் விஜயகாந்தின் லுக் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் என்ற படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நடித்துள்ளதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

goat vijay vijayakanth

படம் குறித்து வெங்கட் பிரபு பல இடங்களில் பேசுகையில், படம் அனைத்து ரசிகர்களுக்கும் திருப்திகரமானதாக இருக்கும் என கூறி வருகின்றார். மேலும் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் என்பது அவர் இறப்பதற்கு முன்னதாகவே நாங்கள் எடுத்துவிட்டோம். கேப்டன அவர்களுக்கு நன்றி கூறும் விதமாகத்தான் படத்தில் அவர் இடம் பெறுவதைப் போன்ற காட்சிகள் வைக்க திட்டமிட்டோம். ஆனால் அவர் மறைந்து விட்டதால் தற்போது அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அது மாறிவிட்டது.

goat vijay vijayakanth

பார்க்காத விஜய்: படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் காட்சிகள் உள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்த்திப்படுத்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தினை திரைக்கதையாகவும், டெக்னிக்கலாகவும் மிகவும் சிறப்பாகவே உருவாக்கியுள்ளோம். பல காட்சிகள் படப்பிடிப்புத் தளத்தில் மேலும் மெருகேற்றப்பட்டது. இதுவரை நீங்கள் பார்க்காத விஜய்யை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்.

goat vijay vijayakanth

கேப்டன் பிரபாகரன்: மேலும் கேப்டன் விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில், அவரது படமான கேப்டன் பிரபாகரன் படத்தின் லுக்கைத்தான் இந்தப் படத்தில் ரீ-கிரியேட் செய்துள்ளோம் எனக் கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படத்தின் முழுப் பெயருடன் விஜயகாந்த்தின் புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர். இவை தற்போது இணையத்தில் அதிகம் உலா வருகின்றது.

goat vijay vijayakanth

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியதையும் பகிர்ந்து, அதனுடன் விஜயகாந்த் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். அதில், " செந்தூர பாண்டியில் விஜய்யுடன் பிரபல நடிகர் நடித்தால் படம் வெற்றி பெறும். அது விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என நினைத்தேன். ஆகவே விஜயகாந்திற்கு போன் செய்து 'உங்களை சந்திக்க வரலாமா?' என கேட்டேன். உடனே போனை வைத்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரே என் வீட்டிற்கு வந்தார்‌. 'என்ன விஷயம் சார்?' என்றார். நான் விபரம் சொன்னேன். 'எத்தனை நாள் கால்ஷீட் தரனும்? எப்ப வரனும்' என்று உடனே ஓகே சொன்னார். 'உங்களுக்கு சம்பளம் எவ்வளவு தரனும்?' என கேட்டேன். 'எனக்கு எதுவும் வேண்டாம். படம் நல்லபடியா முடியனும். விஜய் தம்பி ஜெயிக்கனும். அது போதும்' என்றார். விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்- S.A.சந்திரசேகர்‌." என குறிப்பிட்டுள்ளார். மேலும் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

goat vijay vijayakanth

More from Filmibeat

Read more about: goat vijay vijayakanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X