தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க்..உலகளவில் பேமஸ் ஆக்கியதற்கு நன்றி!
சென்னை: எக்ஸ் தளம், டெஸ்லா நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். தனது படத்தின் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் என்னை கொண்டு சென்ற எலான் மஸ்குக்கு நன்றி என 'தப்பாட்டம் படத்தின் நடிகர் துரை சுதாகர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பிரபலம் : இதுகுறித்து அப்படத்தில் நடித்த துரை சுதாகர் நான் 'களவாணி 2' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எலான் மஸ்க் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நான் நடித்த 'தப்பாட்டம்'படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது உலக நாடுகள் முழுவதும் பரவி, அங்கிருக்கும் தமிழ் மக்கள் இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள்.

எலான் மஸ்க்: இரு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் , ஓபன் ஏஐ நிறுவனங்களை எலான் மஸ்க் சீண்டி இருக்கிறார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனை கண்டித்து ரீட்வீட் செய்த எலான் மஸ்க், ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.
தப்பாட்டம்: ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது. 2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

உலக அளவில் பிரபலம் : இதுகுறித்து அப்படத்தில் நடித்த துரை சுதாகர் நான் 'களவாணி 2' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எலன் மஸ்க் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நான் நடித்த 'தப்பாட்டம்'படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது உலக நாடுகள் முழுவதும் பரவி, அங்கிருக்கும் தமிழ் மக்கள் இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள்.
தமிழ் திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் 'தப்பாட்டம்'. அதன் புகைப்படம் உலக அளவில் பரவியிருக்கிறது. அதற்காக எலன் மஸ்க்குக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை அவர் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவியாக இருந்த சமூக வலைதளங்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி என்று என மகிர்ச்சியுடன் பேசி உள்ளார் துரை சுதாகர்.


Click it and Unblock the Notifications











