இளையராஜாவின் இசையுடன்...பட்டையைக் கிளப்பத் தயாராகிறது பாலாவின் தாரை தப்பட்டை...!!
இயக்குநர் பாலா - சசிகுமார் இணையும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு படபூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி இயக்க இருப்பதாக அறிவித்த படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் பாலா. செழியன் ஒளிப்பதிவு செய்கிறார்.எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார்.

இளையராஜா 1000
தாரை தப்பட்டை இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும். இப்படத்தில் சசிகுமார் தவில் வாசிப்பாளராகவும், வரலட்சுமி கரகாட்டக் கலைஞராகவும் நடிக்கிறார்கள்.

கலைகள் கற்ற சசிகுமார்
இப்படத்திற்காக கரகாட்டக் கலை உள்ளிட்ட பலவற்றை கற்று வந்தார் இயக்குநர் சசிகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் அனைத்து கலைகளும் முறையாக கற்றவுடன் தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குநர் பாலா

வரலட்சுமி
சசிகுமார் ஜோடியாக நடிக்கும் வரலெட்சுமி சரத்குமாரும், உடல் இளைத்து கரகாட்டம் கற்று தயாராக இருக்கிறாராம்.

பாடகி பிரகதி
சசிகுமாருக்கு தங்கையாக பாடகி பிரகதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே 'பரதேசி' படத்தில் இடம்பெற்ற 'ஓர் மிருகம்' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரகதி. தற்போது 'தாரை தப்பட்டை' மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்கம்
இந்நிலையில் இன்று (ஜூலை 14) முதல் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குநர் பாலா, சசிகுமார், வரலட்சுமி, ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காரைக்குடி, தஞ்சாவூர்
காரைக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார் பாலா. இப்படம் மூலம் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கைமுறையை பதிவு செய்ய இருக்கிறார் பாலா.


Click it and Unblock the Notifications











