»   »  ஆக்ரோஷம், வன்முறை, ருத்ர தாண்டவம்... மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!

ஆக்ரோஷம், வன்முறை, ருத்ர தாண்டவம்... மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 1000வது படம், பாலாவின் தாரை தப்பட்டை இசை சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ட்ரைலர் இப்போது வெளியாகியுள்ளது.


Tharai Thappattai movie trailer

ட்ரைலர் பார்த்தவர்கள், மிரட்டலாக வந்திருப்பதாகவும் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்படி உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆடியோ சிடியில் இடம்பெற்றுள்ள கடைசி தீம் மியூசிக்கை இந்த ட்ரைலருக்கு பயன்படுத்தியுள்ளார் பாலா. இந்த இசையோடு பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியிலும் ஆக்ரோஷம் கொப்பளிக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிதாமகன் க்ளைமாக்ஸ் பார்த்த போது இருந்த உணர்வைத் தருகின்றன.


இந்தப் படத்துக்கு சென்சார் குழு ஏ சான்று அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


வரும் பொங்கலன்று உலகம் முழுவதும் வெளியாகிறது தாரை தப்பட்டை.

English summary
Bala has released the first trailer of his Tharai Thappattai movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil