ஏனுங்க ஆர்.ஜே. பாலாஜி, இது தான் தரமான சம்பவமா?: தெரிந்து தான் செய்றீங்களா?
Recommended Video

சென்னை: இன்று முதல் சிறப்பான தரமான சம்பவங்கள் உள்ளது என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
புதுமுகம் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசத்துடன் ரிலீஸாவதாக இருந்தது. பின்னர் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறியது.

அதில் இருந்து எல்.கே.ஜி. குழு அமைதியாக இருந்தது. இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. அதில் அவர் கூறியிருப்பதாவது,
எல்.கே.ஜி. படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியுள்ளது. நிறைய நல்ல படங்களை வினியோகித்து ரிலீஸ் செய்துள்ளது. எல்.கே.ஜி.யில் இருந்து பாடல்கள், டீஸர், ட்ரெய்லர் எல்லாம் ரிலீஸ் பண்ணப் போகிறோம். தரமான சிறப்பான சம்பவங்கள் நிறையா இருக்கு. இன்று மாலையே ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.
பேட்ட படத்தில் ரஜினி பன்ச் வசனம் பேசினாலும் பேசினார் அனைவருமே அந்த தரமான சிறப்பான சம்பவத்தை பிடித்துக் கொண்டனர். அறிவித்தபடி தரமான சம்பவம் என்று கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. அதாவது எல்.கே.ஜி. படத்தின் முதல் சிங்கிள் பாடல் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்ததுமே யாரை கலாய்த்துள்ளார் என்பது நன்றாகத் தெரிகிறது. உங்களுக்கும் தெரிகிறதல்லவா?


Click it and Unblock the Notifications











