இப்டி வசமா சிக்கிட்டீங்களேய்யா முகென்.. இனி உங்கள வச்சு என்னென்ன காமெடியெல்லாம் பண்ணப் போறாங்களோ!

விஜய் டிவியின் தி வால் நிகழ்ச்சியில் முகெனும், தர்ஷனும் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்

சென்னை: பிக் பாஸ் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமான தர்ஷனும், முகெனும் விஜய் டிவியின் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3ல் ஆரம்பம் முதலே டைட்டில் வின்னராகக் கருதப்பட்டவர் தர்ஷன். ஆனால் இறுதிவாரம் அவர் வெளியேறி விட்டார். அதன் தொடர்ச்சியாக டைட்டிலை மலேசிய பாடகர் முகென் வென்றார்.

விரைவில் பிக் பாஸ் கொண்டாட்டம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதில், மதுமிதா மற்றும் சரவணன் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

தி வால் நிகழ்ச்சி

தி வால் நிகழ்ச்சி

இந்நிலையில் தர்ஷனும், முகெனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மா.கா.பா. ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் அப்புகைப்படத்தில் அவர்கள் உள்ளனர்.

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. ஒருவேளை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக அவர்கள் கலந்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்தப் போட்டியில் அவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனரா அல்லது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனரா என்பது தெரியவில்லை.

வெற்றியாளர்

வெற்றியாளர்

விஜய் டிவியைப் பொறுத்தவரை அதன் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் டைட்டில் வென்று விட்டால் அவர்களை தனது மற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து விடும். இதன் மூலம் அந்நிகழ்ச்சியின் டிஆர்பியையும் எகிற வைத்து விடலாம் என்பது அவர்களது கணக்கு. சமயங்களில் இதற்கு தான் அவர்கள் டைட்டில் வென்றார்களா என்ற சந்தேகமே நமக்கு வந்து விடும்.

முகென்

முகென்

அதிலும் பிக் பாஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே, முந்தைய சீசன் வெற்றியாளர்களான ஆரவ்வும், ரித்விகாவும் பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டது நமக்கு ஞாபகம் இருக்கும். அந்தவகையில் இனி அடுத்த பிக் பாஸ் சீசன் முடியும் வரை, நாம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளில் முகெனையும், தர்ஷனையும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X