Bigg Boss 3 செல்லக்குட்டி தர்ஷனை திட்டி அழ வைத்த மோகன் வைத்யா
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் மோகன் வைத்யா திட்டியதால் தர்ஷன் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோக்களை பார்த்தாலே கடுப்பாகிறது என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. நேற்றில் இருந்து ஒரே அழுகாச்சி ப்ரொமோ வீடியோக்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மொரட்டு சிங்கிள்ஸிடம் சாபம் வாங்கிக் கொண்டிருக்கும் தர்ஷன் அழுதுள்ளார்.
தர்ஷன்
இன்று வெளியான முதல் ப்ரொமோ வீடியோவில் மீரா அழுதார். இந்நிலையில் இரண்டாவது வீடியோவில் மோகன் வைத்யா கோபப்பட்டு திட்ட தர்ஷன் ஃபீல் பண்ணி கண் கலங்குகிறார். இனி நீ என்னை அப்பா என்று அழைக்காதே அங்கிள் என்றே கூப்பிடு என மோகன் வைத்யா தர்ஷனிடம் கோபமாக கூறுகிறார். இதை பார்த்த பாத்திமா பாபு தாயுள்ளத்தோடு தர்ஷனுக்கு ஆதரவாக பேசுகிறார்.
அப்பா
தர்ஷன் அழுவதை பார்த்த இளம் பெண்களுக்கு மட்டும் அல்ல வாலிபர்களுக்கும் மனசு கேட்கவில்லை. தர்ஷனுக்கு அப்பா இல்லாத நிலையில் மனதார உங்களை அப்பா என்று கூப்பிடுவது ஒரு தப்பா என்று ரசிகர்கள் மோகன் வைத்யாவிடம் கோபப்பட்டுள்ளனர். எனக்கு யாருமே இல்லை என்று அழுத மோகன் வைத்யாவை பார்த்து பாவப்பட்ட ரசிகர்கள் தற்போது கோபம் அடைந்துள்ளனர்.
ஆதரவு
இளம் பெண்களின் ஆதரவை பெறவே பிக் பாஸ் மலேசியாவில் இருந்து முகென் ராவ் மற்றும் இலங்கையில் இருந்து தர்ஷன் ஆகியோரை அழைத்து வந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இளம் பெண்கள் தர்ஷனை பார்த்து ஃபீல் பண்ணுவதை பார்க்கும்போது எல்லாம் மொரட்டு சிங்கிள்ஸ் அவரை சபித்தனர். இந்நிலையில் தர்ஷன் கண் கலங்கியதும் மனதை மாற்றிக் கொண்டு அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள் மொரட்டு சிங்கிள்ஸ்.
நெட்டிசன்ஸ்
நெட்டிசன்களிடம் நல்ல பையன் என்று பெயர் எடுத்துள்ளார் தர்ஷன். அவர் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட நல்ல பிள்ளையை அழ வைக்க வேண்டாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தொடர்ந்து யாரையாவது அழ வைத்து ப்ரொமோ வீடியோ வெளியிட்டு மொக்கை போட வேண்டாம் பிக் பாஸ் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











