பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. முதல் படவாய்ப்பை அறிவித்த லிப்ரா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கை தமிழரான இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதல் நேர்மையாகவும் நீட்டாகவும் விளையாடி வந்தார். பிக்பாஸ் ஃபைனல்ஸ்க்கு நிச்சயம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

பேரதிர்ச்சி
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் தர்ஷன். நிச்சயம் பிக்பாஸ் ஃபைனல்ஸ்க்கு செல்வோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து தர்ஷனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

தர்ஷனுக்கு வாய்ப்பு
தர்ஷன் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷனுக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. லிப்ரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தர்ஷன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஆட்டத்தை தொடங்குங்கள்
இதுதொடர்பாக லிப்ரா நிறுவனம் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, டியர் தர்ஷன், இறுதியாக உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால் கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்கவுள்ளது. லிப்ரா புரடெக்ஷனிடமிருந்த வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











