தர்ஷன் மனுஷனே கிடையாது.. மதுமிதாவிடம் கொட்டித்தீர்த்த சனம் ஷெட்டி!!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் குறித்து அவரது காதலி சனம் ஷெட்டி மதுமிதாவிடம் பேசிய தகவல் வெளியாகியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா சக போட்டியாளர்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றார். இதனால் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை மீறியதாக கூறி நிகழ்ச்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
தனது தற்கொலைக்கு முயற்சிக்கு, வனிதா, கவின், சாண்டி, ஷெரின், தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்டோர்தான் காரணம் என்று தனது பேட்டியில் பல முறை தெரிவித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர்களின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.

சாடிய மதுமிதா
இந்நிலையில் தான் அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, கவின் உட்பட யாரும் தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என தெரிவித்திருகிறார். பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிரச்சனை கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்களை கடுமையாக சாடினார்.

வருத்தப்பட்ட சனம்
மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டி தன்னை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். அப்போது கையில் இப்படி காயப்படுத்திக்கொண்டபோது தர்ஷன் முதலுதவி செய்யக்கூட வராதததை நினைத்து வருத்தப்பட்டுள்ளார் சனம் ஷெட்டி.

மனுஷனே இல்லை
தர்ஷன் முதலுதவி செய்யக்கூட வராமல் இருந்தது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறினாராம் சனம் ஷெட்டி. தர்ஷன் வெளியே வந்த பிறகு உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இல்லையென்றால் மனுஷனே இல்லை என்றும் கூறினாராம் சனம் ஷெட்டி.

சுமூகமான உறவில்லை
இதுவரை தர்ஷன், மதுமிதாவிடம் பேசவும் இல்லை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் பங்கேற்றதில் இருந்தே இருவருக்கும் இடையில் பழையபடி சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.

இப்போதுதான் பேசுகிறது
அண்மையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் கூட நான் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன் என்பது இப்போதுதான் புரிகிறது. அவர்கள் போக வேண்டும் என விரும்பினால், கதவைத் திறந்து வையுங்கள். அவர்கள் செல்லட்டும். காலம் பதில் சொல்லும் அது லாபமா, நஷ்டமா என்று பதிவிட்டிருந்தார்.

இலங்கை சென்ற தர்ஷன்
இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கும் தர்ஷனுக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா என்று கேட்டனர். இதனிடையே பிக்பாஸ் முடிந்து இதுவரை சென்னையில் இருந்த தர்ஷன் கடந்த வாரம் இலங்கை புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











