ஆதாரம்லாம் பக்காவா இருக்கு.. தர்ஷனுக்கு 7 வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கலாம்.. சனத்தின் வக்கீல் பரபர!

Recommended Video

தர்ஷனுக்கு financial help பண்ணது நானு ஆனா bigg boss க்கு அப்பறம் மாறிட்டாரு

சென்னை: ஆதாரம் எல்லாம் பக்காவாக இருப்பதால் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய பிக்பாஸ் தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

சனம் ஷெட்டியுடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனால் கடுப்பான தர்ஷன், செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

மாறிவிட்ட தர்ஷன்

மாறிவிட்ட தர்ஷன்

சனம் ஷெட்டி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அதெல்லாம் பொய் என்று கூறி வருகின்றனர். இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி தர்ஷன் கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய் என தெரியவந்துள்ளது. அதோடு தர்ஷனுக்கு நெருக்கமானவர்களளே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் முற்றிலும் மாறிவிட்டதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஏமாற்றுகிறார்

ஏமாற்றுகிறார்

இந்நிலையில் தர்ஷன் மீது புகார் அளித்துள்ள சனம் ஷெட்டி, தர்ஷன் தனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெஸேஜ்கள், தர்ஷனுக்கு செலவு செய்ததற்கான சில பில்கள் உள்ளதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன் ஏமாற்றுவதற்கான ஆதாராங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உறுதியாக உள்ளார்

உறுதியாக உள்ளார்

தர்ஷன் தன்னை ஏமாற்றியதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தர்ஷனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார் சனம் ஷெட்டி. இந்நிலையில் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

சிறை தண்டனை

சிறை தண்டனை

அதாவது தர்ஷன் மீதான சனம் ஷெட்டியின் புகாருக்கு ஆதாரங்கள் பலமாக இருப்பதால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பணம் வாங்கி ஏமாற்றியதற்காக இந்த தண்டனை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார். சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X