இளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை: பல இளம் நடிகர்களுக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனுக்கு கிடைத்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கை தமிழரான இவர், மிஸ்டர் இலங்கை பட்டம் வென்றிருக்கிறார். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்த தர்ஷனுக்கு அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களை மிரட்டி அல்லி ராஜ்ஜியம் செய்து வந்த வனிதாவை முதல் முறையாக எதிர்த்து பேசினார். வனிதாவின் வாய்க்கு பயந்து சக போட்டியாளர்கள் அமைதி காக்க, வனிதாவிடம் பதிலுக்கு பதில் பேசி லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் தர்ஷன்.

தர்ஷன் துணிச்சல்
வனிதாவின் அட்டகாசத்தால் நொந்து போயிருந்த மக்கள், அவரை யாரும் எதிர்த்து பேச மாட்டார்களா என காத்திருந்த நேரத்தில் தர்ஷன் அவரிடம் எகிறியது ரசிகர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷனின் துணிச்சலையும் நெட்டிசன்கள் பாராட்டினர்.

செல்லப்பிள்ளை
மேலும் சக போட்டியாளர்களிடம் அன்பாக நடந்து கொண்ட தர்ஷன், தப்பென மனசுக்கு பட்டதை பட்டென கேட்டு மூக்கை உடைத்தார். சரவணன் சேரனிடம் எகிறியபோதும் வனிதா மற்ற போட்டியாளர்களிடம் மல்லுக்கு நின்ற போதும் இறங்கி செய்தார் தர்ஷன். இதனால் மக்களின் செல்லப்பிள்ளை ஆனார்.

ஏமாற்றம்
இதனை தொடர்ந்து தர்ஷன் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் தர்ஷன்.

கமல் அறிவிப்பு
அதனை தொடர்ந்து தர்ஷனுக்கு தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்தார் கமல். இதனை தொடர்ந்து தர்ஷன் அண்மையில் இலங்கை புறப்பட்டார்.

பாலச்சந்தருக்கு சிலை
இந்நிலையில் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதி சென்னையில் புதிதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்தார் கமல். அங்கு சினிமாவில் தனது தந்தை என கூறும் இயக்குநர் கே பாலச்சந்தருக்கு சிலை வைத்தார்.

மூத்த பிரபலங்கள்
இந்த புதிய அலுவலகம் மற்றும் சிலை திறப்பு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், வைரமுத்து, மணிரத்னம், கே எஸ் ரவிக்குமார் உட்பட திரைத்துறையின் பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் மூத்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தர்ஷனும் பங்கேற்றார்.
வைரலாகும் போட்டோ
கமல், ரஜினி, மணிரத்னம், ரமேஷ் கண்ணா ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களின் பின்னாடி நின்று விழாவை ரசித்திருக்கிறார் தர்ஷன். அந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தர்ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











