“ப்ளீஸ்” எவிக்சனுக்கு பின் தர்ஷன் போட்ட உருக்கமான முதல்பதிவு.. கண்ணீரில் ரசிகர்கள்.. அதிரும் இணையம்
தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி என பிக் பாஸ் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: எவிக்ஷனுக்கு பிறகு பிக் பாஸ் தர்ஷன் வெளியிட்ட முதல் பதிவு இணையத்தை உலுக்கி வருகிறது.
நல்ல பையன்யா தர்ஷன்.. என்னமா வளர்த்திருக்காங்க அவங்க வீட்ல.. நிச்சயம் இந்த முறை டைட்டில் வின்னர் அவர் தான்.. இப்படி தான் தர்ஷனை பற்றி பிக் பாஸ் ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் அவர்களின் நம்பிக்கை எல்லாம் நேற்று தவிடுபொடியாகிவிட்டது. டைட்டில் வின்னர் என சொல்லப்பட்ட தர்ஷன் 98வது நாளில் வெளியே அனுப்பப்பட்டு விட்டார். தர்ஷன் வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பைனலுக்கு பிறகு பேசிக்கலாம்
ஆனால் அதை பற்றி எல்லாம் யோசிக்காமல், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டில் குடும்பத்துடன் ஹாயாக செட்டிலாகிவிட்டார் தர்ஷன். எவிக்ஷன் குறித்து கருத்து கேட்பதற்காக நாம் அவரை தொடர்பு கொண்ட போது கூட, பைனலுக்கு பிறகு பேசிக்கலாம் என்பதே அவரது பதிலாக வந்தது.
View this post on InstagramA post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on
தர்ஷனின் முதல் பதிவு
டைட்டில் ஜெயிக்க முடியலையே என உள்ளுக்குள் சின்னதாக ஒரு வருத்தம் இருந்தாலும், அதை எல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் திடமாக இருக்கிறார் தர்ஷன். இந்த நிலையில், தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

முகம் தெரியாதவர்களின் அன்பு
"தெரிந்தவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் தெரியாதவர்களிடம் இருந்து, ஒருமுறைக்கூட பார்க்காதவர்களிடம் இருந்து அன்பு கிடைப்பது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வை தருகிறது.

வாழ்வின் மிகச் சிறந்த நாள்
என் வாழ்வின் மிகச் சிறந்த நாள் இன்று. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரிடம் இருந்தும் வாழ்த்துகளும், அன்பும், ஆதரவும் கொட்டுகிறது. இப்படி ஒரு சிறந்த பரிசை கொடுத்த பிக் பாஸ் 3க்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்
என்னை தங்களின் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக நினைத்து, கடந்த 98 நாட்களாக அன்பும், ஆதரவும் அளித்த அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனது இதயத்தில் நான் அன்பை உணர்கிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்", என தர்ஷன் பதிவிட்டுள்ளார்.

குவியும் லைக்ஸ்
தர்ஷனின் இந்த பதிவை ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தர்ஷனின் வெளியேற்றத்துக்காக கண்ணீர் சிந்தியதாக பலரும் அதில் குறிப்பிட்டுள்ளனர். பிக் பாஸ் டைட்டிலை விட பெரிய டைட்டிலான மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார் தர்ஷன்.


Click it and Unblock the Notifications











