பள்ளி நாட்களில் எப்படி இருந்திருக்கார் பாருங்க.. தூசிதரன் ஆசிரியருடன் தர்ஷன்.. வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் தனது பள்ளிக்கூட நாட்களில் தூசிதரன் ஆசிரியருடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் தர்ஷன் இலங்கை தமிழர் ஆவார். இவரின் யாரையும் சாராத குணம் மற்றும் தவறை தட்டிக்கேட்கும் தைரியம் ஆகியவற்றால் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் அதிக ரசிக பெருமக்களை கொண்டவர் என்றே சொல்லாம். அந்தளவுக்கு நேர்மையாக விளையாடி வருகிறார் தர்ஷன்.
காரணம்
மேலும் டாஸ்க்கின் போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தர்ஷனுக்கு வனிதாவை பிடிக்கவில்லை என்பதும், அவரின் பேச்சை கேட்காமல் இருக்கிறார் என்பதும் மக்களுக்கு அவரை பிடிக்கும் காரணங்களில் ஒன்று.

தூசிதரன் ஆசிரியர்
கடந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த பள்ளிக்கூட டாஸ்க்கின் போது தர்ஷன் தனது பள்ளி ஆசிரியர் தூசிதரன் குறித்து உருக்கமாக பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்கள், குறிப்பிட்ட ஆசிரியர்களை நிகழ்ச்சியில் பேச வைத்தார்.

வாழ்த்து
தர்ஷன் குறிப்பிட்ட அவரின் தூசிதரன் ஆசிரியர் அவருடன் பேசினார். அப்போது நிகழ்ச்சியில் வெற்றிப்பெற வேண்டும் என்று தர்ஷனை வாழ்த்தினார்.

போட்டோ வைரல்
இந்நிலையில் தர்ஷன் பள்ளிக்கூட நாட்களில் அத்லெட்டிக் போட்டியில் வெற்றி பெற்றபோது அதற்கான சான்றிதழுடன் பள்ளி ஆசிரியர் தூசிதரனுடன் எடுத்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











