ராஜாவுக்கு செக் படம் பார்க்கப்போன தர்ஷன்.. யார்கூடன்னு பாருங்க.. ஜோடி பொருத்தம் செம!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் பிரபலம் தர்ஷன், ராஜாவுக்கு செக் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்க்க சென்ற போட்டோ வைரலாகி வருகிறது.
இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் நடந்து கொண்ட விதமும் நேர்மையான விளையாட்டும் வனிதாவை எதிர்த்த அவரது துணிச்சலும் மக்களிடம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.
இதனால் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்தான் என நம்பினர் மக்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த போதும் கூட தர்ஷன்தான் வின்னர் ஆவார் என சக ஹவுஸ்மேட்ஸ் கருத்து தெரிவித்தனர்.

ஷெரினுடன் நெருக்கம்
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஷெரினுடன் நெருக்கமாக பழகினாலும், தனக்கு வெளியில் காதலி இருக்கிறார், ஷெரின் என்னுடைய பிரன்ட் என்று தெளிவாக கூறினார்.

கோபப்பட்ட சனம்
ஆனாலும் ஷெரின்- தர்ஷன் இடையிலான உறவை வனிதா தவறாக பேசினார். இதனால் வீடியோ வெளியிட்ட தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை, ஆனால் நான் தர்ஷனை காதலித்துக்கொண்டுதான் இருப்பேன் என்றார்.

ராஜாவுக்கு செக்
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டியை சந்தித்தார். இந்நிலையில் இயக்குநர் சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படத்தின் முன்னோட்ட காட்சி நேற்று பிரசாத் லேப்பில் ஒளிபரப்பப்பட்டது.

காதலியுடன் தர்ஷன்
இதில் இயக்குநர் சேரனுக்கு வேண்டியப்பட்ட பலரும் பங்கேற்றனர். அவர்களில் ஒருவாராக பிக்பாஸ் புகழ் தர்ஷன் தனது காதலியான சனம் ஷெட்டியுடன் சென்று படத்தை பார்த்தார்.
வைரலாகும் போட்டோக்கள்
சனம் ஷெட்டி பச்சை நிறப்புடவையில் தேவைதையை போல் இருந்தார். இருவரும் சேரன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷெரின் எங்கே புரோ?
அதனை பார்த்த நெட்டிசன்கள், ஷெரின் எங்கே புரோ? நீங்கதான் ஷெரின்கிட்ட க்ளோஸா போனீங்க.. அவரை கிண்டல் பண்ணுணீங்க.. அப்போ அதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான கன்டென்ட்டா என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











