திமுகவை அழித்துவிட்டாரா விஜய்?.. கலைஞர் கூட நினைத்திருக்கமாட்டாராம்.. என்ன இப்படி இறங்கிருக்காங்க?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. விஜய் மட்டும் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் கண்டு வெற்றியடைந்திருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. கண்டிப்பாக அவருக்கு அது கிடைக்கும். இந்நிலையில் திமுகவை விஜய் அழித்துவிட்டார் என்று ஒருதரப்பினர் சோஷியல் மீடியாவில் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

நடிகராக கலக்கிவந்த விஜய் தன்னுடைய ரசிகர்களின் ஆசைப்படி கட்சி தொடங்கி அதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரை வைத்தார். கட்சி ஆரம்பித்து அவர் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுப்பார் என பலர் எதிர்பார்த்தார்கள். அவரோ அவுட் ஆஃப் தி சிலபஸாக திமுகவை கடுமையாக எதிர்த்தார். நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கும், தவெகவுக்குமான போட்டி என்றும் பிரகடனப்படுத்தினார். அவர் சொன்னபடி இந்த தேர்தல் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போட்டியாகத்தான் தெரிந்தது.

That Boy Behind Karunanidhi RGV s Viral Take on Vijay Ignites Debate
Photo Credit:

என்ன நடந்தது?: நேற்றைய வாக்கு எண்ணிக்கை தொடங்கி தபால் வாக்குகளை எண்ணுகையிலேயே தவெக பட்டியலுக்குள் வந்துவிட்டது. அதுவே பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் தபால் வாக்குகள் என்றாலே அது பெரும்பாலும் திமுகவுக்குதான் என்ற நிலைமை இருந்தது. தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் ஆரம்பத்தில் திமுக கொஞ்ச நேரம் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதிரடியாக விஜய்யின் தவெக மூன்றாவது இடத்திலிருந்து முன்னேறி முதல் இடத்துக்கு நேற்று காலையிலேயே வந்துவிட்டது.

Also Read
அப்படி செய்வார்கள் மயங்கிடாதீங்க சி.எம் விஜய் சார்.. பிரபலம் இப்படி ஒரு அட்வைஸை போட்டிருக்காரே
அப்படி செய்வார்கள் மயங்கிடாதீங்க சி.எம் விஜய் சார்.. பிரபலம் இப்படி ஒரு அட்வைஸை போட்டிருக்காரே

108 இடங்களில்: அதனை யாருமே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியும் தவெகவை திமுக முந்திவிடும் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் தவெக வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை சரசரவென்று உயர்ந்து 108 தொகுதிகளில் வந்து நின்றது. திமுக கூட்டணி 73 இடங்களை பிடித்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் அதிமுக இருக்கிறது. 108 தொகுதிகளை வென்றதால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்கப்பட்டது. விஜய்யும் இரு தொகுதிகளிலும் வெற்றிதான்.

திமுக காலி?: விரைவில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தவெக ஆளுங்கட்சி, திமுக எதிர்க்கட்சி. சூழல் இப்படி இருக்க விஜய்யின் இந்த வெற்றியை தவெகவிலேயே சிலர் நடக்கும் என்று நினைக்கவில்லைதான். திமுகவை பொறுத்தவரை விஜய்யால் ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது வாக்குகளை பிரிப்பார் என்றுதான் நினைத்தது. ஆனால் தமிழ்நாடே எதிர்பார்க்காத வகையில் நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற்று ஆட்சியை பிடிக்கிறது தவெக. இதனால் இனிமேல் திமுக காலி என விஜய் ரசிகர்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் ஃபோட்டோ: இந்நிலையில், விஜய் சிறுவனாக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பின்னால் விஜய் இருந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் ராம் கோபால் வர்மா, 'பின்னால் நிற்கும் சிறுவன்தான் பின்நாட்களில் திமுகவை அழிக்கப்போகிறார் என்று கலைஞர் கருணாநிதி நினைத்திருக்கமாட்டார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த திமுகவினரோ, 'திமுகவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பு இதைவிட மோசமான தோல்வியையே பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் அழியாத கட்சி விஜய்யால் அழிந்துவிடுமா' என கேள்வி கேட்டு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X