twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் பிளாஷ்பேக்.. அந்த சூப்பர்ஹிட் படத்தை நிராகரித்த பிரபல ஹீரோ.. பிறகுதான் நடந்தது அந்த மேஜிக்!

    By
    |

    சென்னை: தமிழில் சூப்பர் ஹிட்டான அந்த படத்தை அந்த ஹீரோ நிராகரித்ததை அடுத்து புதுமுகங்கள் நடித்தனர்.

    நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருப்பது சினிமாவில் கொஞ்சம் அதிகம்தான்.

    படக்குழு ஒன்றை முடிவு செய்தால், விதி வேறொன்றை வித்தியாசமாக முடிவு செய்திருக்கும்.

    மனதுக்குள் வருத்தம்

    மனதுக்குள் வருத்தம்

    அது அப்படித்தான். இதற்கு பல படங்கள் உதாரணங்களாக இருக்கின்றன. அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்கள் கூட ஏதோ ஒரு காரணத்துக்காக, நல்ல கதைகளை விட்டுவிட்டு, பிறகு மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் இந்த சூப்பர் ஹிட் படத்துக்கும் நடந்திருக்கிறது.

    வெயிலின் வெற்றி

    வெயிலின் வெற்றி

    அது அங்காடி தெரு! பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நடிப்பில் வெளியான வெயில் படத்தின் ஹிட்டுக்கு பிறகு இயக்குனர் வசந்தபாலன் உருவாக்கிய படம், இது. முதல்படமாக அவர் 'ஆல்பத்'தை உருவாக்கி இருந்தார். அது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால், வெயிலின் வெற்றி ஆல்பத்தை மறக்கடிக்க வைத்துவிட்டது.

    செல்ல சண்டை

    செல்ல சண்டை

    அங்காடி தெரு படத்தில் புதுமுகம் மகேஷ், அஞ்சலி, பிளாக் பாண்டி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். பிறகு அவருக்கும் இயக்குனருக்கும் செல்ல சண்டையாகிவிட, விஜய் ஆண்டனி இசை அமைப்பாளர் ஆனார்.

    ரத்தமும் சதையுமாக

    ரத்தமும் சதையுமாக

    ஐங்கரன் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியிருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் இளம் பெண்களும் ஆண்களும் எப்படி கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என்பதை ரத்தமும் சதையுமாகச் சொன்ன படம் இது.

    நடிச்சா நல்லாருக்கும்

    நடிச்சா நல்லாருக்கும்

    பல விருதுகளை பெற்ற இந்தப் படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்திருந்தார், இயக்குனர் வசந்தபாலன். அதனால், படத்தின் கதையை அவரிடம் சொன்னார். கதையை ரசித்துக் கேட்ட நடிகர் தனுஷ், 'கதை நல்லாருக்கு. இதுல நான் நடிக்கிறதவிட புதுமுகங்கள் நடிச்சா நல்லாருக்கும்' என்றார்.

    மகேஷாக மாறிப்போனார்

    மகேஷாக மாறிப்போனார்

    அதற்குப் பிறகு புதுமுகமான மகேஷ் நடித்தார். படம், எதிர்பார்த்ததை விட ஹிட்டானது. மகேஷ், 'அங்காடி தெரு மகேஷாக'வே மாறிப்போனார். ஒரு வேளை நடிகர் தனுஷ் நடித்திருந்தால், படம் இன்னும் மெகா ஹிட்டாகி இருக்குமோ என்னவோ? சினிமாவில் எதுவும்தான் நடக்கும்.

    English summary
    Actor Dhanush was first choice for Vasanthabalan Angadi theru. After heard the story, he had suggested new faces.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X