அந்த வாய்ஸ் என் வாய்ஸ் இல்லை.. அதிரடியாக மறுத்த கவின்.. அப்போ மீம் போட்டதெல்லாம் வேஸ்ட்டா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சொல்லியடி டாஸ்க்கில் முட்டையை தலையில் உடைக்கும் போட்டிக்கு ஒரு வாய்ஸ் கொடுக்கப்பட்டது.
அந்த குரல் போன சீசன் போட்டியாளர் கவினின் குரல் என பிக் பாஸ் ரசிகர்கள் #kavin என்ற ஹாஷ்டேக்கையும் ஏகப்பட்ட மீம்களையும் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில், அந்த குரல் தன்னுடைய குரல் அல்ல என நடிகர் கவின் ட்வீட் போட்டு ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளார்.

சொல்லி அடி டாஸ்க்
சொல்லி அடி டாஸ்க்கில் முட்டையை உடைத்துக் கொண்டு போட்டியாளர்கள் விளையாடுவதை ரசிப்பதை விட்டு விட்டு, அதில் வந்த திண்டுக்கல் தண்டபாணி யாருடா என்கிற கேள்வி தான் ஹைலைட் ஆனது. அதுவும், கவினின் குரல் என கிளம்பிய வதந்தி வேற லெவலில் வைரலானது.

அது நான் இல்லைப்பா
#kavin என்ற ஹாஷ்டேக்கையும் ஏகப்பட்ட மீம்களையும் போட்டு ரசிகர்கள் திடீரென டிரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அதில் வைரலான ஒரு மீமை ஷேர் பண்ண நடிகர் கவின், அது நான் இல்லைப்பா என்றும், திண்டுக்கல் தண்டபாணியாக குரல் கொடுத்த நிஜமான கலைஞருக்கு அந்த கிரெடிட்ஸ் போய் சேரட்டும் என ரொம்பவே ஸ்வீட்டாக பதில் அளித்துள்ளார்.

அழுகை எனும் அருவியில்
கவின் அப்போ அது உங்க வாய்ஸ் இல்லையா என #kavin ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்த கவின் ஆர்மியினர் எல்லாம் கண்ணீர் விட்டு அழுவது போல ‘அழுகை எனும் அருவியில்' என்கிற மீம் டெம்பிளேட்டை போட்டு தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஈக்குவலைசர் பத்திலாம்
அது கவினின் குரல் தான் என்றும் கொஞ்சம் equalizer லாம் பண்ணதால குரலில் சில மாற்றங்கள் நடந்துள்ளன என இஷ்டத்துக்கும் கொளுத்திப் போட நேற்றைய நிகழ்ச்சி வேற லெவலில் வைரலானது. இந்நிலையில், கவின் தான் அதற்கு குரல் கொடுக்க வில்லை என விளக்கியதும், ரசிகர்கள் யார் அப்படி சொன்னது என கலாய்த்து வருகின்றனர்.

அப்பவே தெரியும்
"எனக்கு அப்பவே தெரியும் சொன்னா எல்லாரும் டிசப்பாய்மென்ட் ஆகிடுவாங்கன்னுதா பேசாம இருந்துட்டேன்" என ஏகப்பட்ட ரசிகர்கள் இப்போ கவினுக்கு அய்யோ தலைவா தெரியாம டிரெண்ட் எல்லாம் பண்ணிட்டோமேன்னு இப்போ வருத்தப்பட்டு வருகின்றனர்.

முழுக்க முழுக்க வதந்தி
அது முழுக்க முழுக்க வதந்தி அப்படித்தானே கவின் என விஜய்சேதுபதி மாஸ்டர் இசை விழாவில் பேசிய டெம்பிளேட்டை எடுத்துப் போட்டு பங்கமாக வதந்தியை கிளப்பி விட்டவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினோட குரலாவது கேட்காத என ஏங்கும் ரசிகர்களுக்கு சீக்கிரமே வெள்ளித்திரையில் லிப்ட் ஓட வரப் போகிறார்.


Click it and Unblock the Notifications











