For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இப்போது வைரலாகும், 6 வருடத்துக்கு முன் கொடுத்த லிப் லாக் முத்தம்.. பிரபல ஹீரோயின் வருத்தம்..!

  By
  |

  கொச்சி: காட்சிக்காக கொடுத்த லிப் லாக் முத்தக்காட்சியை விளம்பரத்துக்காக பயன்படுத்தியதால் வருத்தம் அடைந்தேன் என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.

  தமிழில், விக்ராந்த் ஜோடியாக, முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனிரோஸ்.

  இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். அவர் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் அறிமுகமானார்.

  இன்னும் விவாகரத்து ஆகல.. அதுக்குள்ள புது காதலருடன் சுற்றும் பிரபல நடிகை.. கடலில் ஹாட் லிப் கிஸ்!

  திருவனந்தபுரம் லாட்ஜ்

  திருவனந்தபுரம் லாட்ஜ்

  இந்தப் படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்ததும் கவனிக்கப்பட்டார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது. இதையடுத்து தமிழில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அதில் அதிகம் கவனிக்கப்பட்ட படம், ஒன் பை டூ.

  லிப் லாக் முத்தம்

  லிப் லாக் முத்தம்

  அருண்குமார் அரவிந்த் இயக்கிய இந்தப் படத்தில், பகத் பாசில், முரளி கோபி, அபிநயா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை எழுதியது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இப்போது வரை பேசப்படுவதற்கு, அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம்.

  சொல்லவில்லை

  சொல்லவில்லை

  இந்த முத்தக்காட்சி இப்போதுவரை சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சமீபத்தில் நடிகை ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இப்படியொரு லிப் லாக் காட்சி பற்றி படத்தின் இயக்குனர் சொல்லவில்லை. கதைப்படி என் கேரக்டரை விரும்பிய ஒருவர், இறந்து விடுகிறார். பிறகு திடீரென்று என் முன் தோன்றினால், என்ன நடக்கும் என்பதுதான் காட்சி.

  தகுதியானதுதான்

  தகுதியானதுதான்

  இதுதான் எனக்குச் சொல்லப்பட்டது. உடனடியாக அந்த காட்சியை பற்றி யோசித்து, அந்த கேரக்டருக்கு அந்த லிப் லாக் தகுதியானதுதான் என்று தோன்றியதால் அதை செய்வதில் தவறில்லை என்று செய்தேன். அப்போது எனக்கு எந்தவிதமான மனநிலையும் இல்லை. ஆனால், பிறகு அதை விளம்பரத்துக்காக பயன்படுத்தியபோது எனக்கு வருத்தமாக இருந்தது.

  Manimegalai promotes Organic sanitary pads | Lock Down
  படுக்கையறை காட்சி

  படுக்கையறை காட்சி

  நல்ல நோக்கத்துக்காக நாம் சில விஷயங்களை செய்யும் போது, அது வேறு சிலவற்றுக்குத் தான் பயன்படுகிறது. இருந்தாலும் அது படுக்கையறை காட்சியல்ல. ஆனால், இனி லிப் லாக் காட்சி என்று சொன்னால், ஒரு முறையல்ல, பத்துமுறை யோசிப்பேன். இவ்வாறு கூறியுள்ளார் நடிகை ஹனி ரோஸ். இவர் தான் தமிழில் நடித்தபோது பலவிதமான கஷ்டங்களை அனுபவித்தேன் என்று ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

  English summary
  Actress says, 'I’ll think at least ten times before doing any lip lock scene, from now on'.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X