கொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்!

By

சென்னை: அஜித் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக வில்லன் நடிகர் ஒருவர் சண்டை போட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

செல்ல சண்டைகளுக்கும் ஈகோவிற்கும் சினிமாவில் பஞ்சமே இருக்காது. சின்ன விஷயம் கூட ஈகோவால் பெரிய பிரச்னையாக தலைதூக்கும்.

இது சினிமாவில் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு படத்திலும் இது நடக்கும்.

அஜித்தின் ராசி

அஜித்தின் ராசி

அப்படி சின்ன சின்ன விஷயங்களால் பல படங்களில் பெரிய பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங்கில், ஒரு சட்டைக்காக நடந்திருக்கிறது பெரும் சண்டை. அஜித்குமார் நடிப்பில் உருவான படம், ராசி. 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரம்பா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

சிற்பி இசை அமைத்த இந்தப் படத்தை எஸ்.என்.ராஜா தயாரித்திருந்தார். முரளி அப்பாஸ் இயக்கி இருந்தார். இதில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. அப்போது அவர் பிரபுதேவாவுடன் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

சம்பள விஷயம்

சம்பள விஷயம்

இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்துகொண்டிருந்தது. அங்கு இயக்குனர் முரளி அப்பாஸும், தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜாவும் ஷில்பா ஷெட்டியை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர். கதையை அவரும் அவர் அம்மாவும் கேட்டனர். பிறகு கதை நல்லா இருக்கு, நடிக்கலாம் என்ற அவர்கள் சம்பள விஷயத்தை ஆரம்பித்தனர்.

நடிகை ரம்பா

நடிகை ரம்பா

அவர் கேட்டத் தொகை அதிகமாக இருந்தது. அப்போதே ரூ.25 லட்சம் வேண்டும் என்றாராம். கால்ஷீட் பிரனையும் ஏற்பட்டது. இதனால் அவரை விட்டு விட்டு நடிகை ரம்பாவை ஒப்பந்தம் செய்தனர். இதன் ஷூட்டிங் காரைக்குடியில் நடந்தது. அப்போது வில்லனை, ஹீரோ அஜித் தரையில் போட்டு இழுத்து வருவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டுக்கு செல்லும்போது அந்த வில்லன் நடிகர், 'சட்டை அழுக்காகி விட்டது. வேறு சட்டை வேண்டும்' என்றார். 'சண்டைக்காட்சிதானே, சட்டை அழுக்காக இருந்தால் பரவாயில்லை' என்று கூறப்பட்டது. அடுத்த ஷாட்டுக்கு ரெடியானார் இயக்குனர். மறுத்தார் வில்லன். இது பெரிய பிரச்னையானது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

பிறகு, கோபத்தில் சென்னைத் திரும்பி விட்டார் வில்லன் நடிகர். இதனால் அவர் இல்லாத காட்சியை படக்குழு எடுத்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்தனர். பிறகு ஷூட்டிங் தொடர்ந்தது. அந்த வில்லன் பிரகாஷ்ராஜ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X