'தாத்தா காரை தொடாதே'... எச்சரிக்கும் எம்.ஜி.ஆர் பேரன்!
எம் ஜி ஆர் பேரன் நடிக்கும் தாத்தா காரை தொடாதே படத்தின் படிப்பிடிப்பு துவங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கும் 'தாத்தா காரை தொடாதே' படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் 'தாத்தா காரை தொடாதே'. இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
எம் ஜி ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்தப் படத்தின் நாயகன் வி.ராமச்சந்திரன். இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியது எம்.ஜி.ஆர். தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமாவில் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ எனக் கருதும் வகையில், சமீபகாலமாக படங்களுக்கு வித்தியாசமான முறையில் பெயரிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படத்தின் தலைப்பும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இப்படத்தின் தலைப்பை பார்க்கும் போதே நிச்சயம் இது காமெடிப் படமாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











