வெளியானது தட்டான் தட்டான் வீடியோ சாங் யூ டியூபில் வைரல்
சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கர்ணன்.
Recommended Video
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஆதரவு
திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களின் பேராதரவில் வசூல் மழையை பொழிந்தது. மாஸ்டர் படத்திற்கு பிறகு அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் கர்ணன் திரைப்படம் ஓடியது. நடிகர் தனுஷுக்கும் கேரியர் பெஸ்ட் ஓபனிங் படமாக கர்ணன் அமைந்தது.

தொடர் வெற்றி
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கினார். அதன் விளைவாக தொடர் வெற்றி கிடைத்தது. இதன் வெற்றியை தொடர்ந்து தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

வைரலாகும் வீடியோ
கர்ணன் படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. படத்தில் இடம்பெற்ற கிராமிய இசை & பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. நேற்று கர்ணன் படக்குழு "தட்டான் தட்டான்" வீடியோ சாங்கை வெளியிட்டது. 4 லட்சம் வியூவ்ஸ்களை கடந்து தற்போது இந்த வீடியோ சாங் வைரலாகி வருகிறது.

OTT வெளியீடு
கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு படக்குழு மே 9ம் தேதி படத்தை OTT யில் வெளியிட முடிவு செய்துள்ளாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். கர்ணன் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











