'எங்கிட்ட ஐயம் பேக்-னு சொன்னாரே..' நடிகர் தவசியின் திடீர் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கம்!

By

சென்னை: நடிகர் தவசியின் மறைவுக்கு ரோபா சங்கர் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தவசி. தனது பெரிய மீசையின் மூலம் கவனிக்கப்பட்டவர்.

கிழக்குச் சீமையிலே படம் தொடங்கி, அண்ணாத்த வரை, சுமார் 140 படங்களில் நடித்துள்ளார்.

கருப்பன் குசும்புக்காரன்

கருப்பன் குசும்புக்காரன்

சிவகார்த்திகேயனின், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவர் பேசிய, கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனம் கவனிக்கப்பட்டது. ரஜினி முருகன் படத்தில் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக தவசி நடித்திருப்பார். அழகர்சாமியின் குதிரை படத்தில் கோடாங்கியாக நடித்திருந்தார்.

உணவுக்குழாய் கேன்சர்

உணவுக்குழாய் கேன்சர்

தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. நோய் தீவிரம் அடைந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் மெலிந்து காட்சி அளிக்கும் அவருடைய, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. அவர் மதுரையில், சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

பணமின்றி தவிப்பு

பணமின்றி தவிப்பு

சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சரவணா மருத்துவமனை சார்பில் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் உதவி வந்தார். இந்நிலையில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்பட பலர் அவருக்கு உதவினர்.

திடீரென உயிரிழந்தார்

திடீரென உயிரிழந்தார்

நடிகர் ரோபோ சங்கரும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென உயிரிழந்தார். அவர் மறைவு, சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகர் ரோபா சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னிடம், ஐயம் பேக் என்று சொன்ன தவசி அண்ணன் மறைவு வருத்தத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

அவ்வளவு கஷ்டமாயிடுச்சு

அவ்வளவு கஷ்டமாயிடுச்சு

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தவசி அண்ணனை கடைசியா பார்த்தது நான்தான். எல்லா கலைஞர்களும் நிறைய உதவி பண்ணியிருக்கீங்க. அவர் இறந்த செய்தியை கேட்கறதுக்கு அவ்வளவு கஷ்டமாயிடுச்சு. இப்பதான் பாத்துட்டு வந்தோம், எங்கிட்ட ஐயம் பேக்குன்னுலாம் சொன்னாரேன்னு நினைச்சு கஷ்டமாயிடுச்சு.

சரியான நேரத்துல

சரியான நேரத்துல

தயவு செய்து, நம்ம திரைக்கலைஞர்களுக்கு நம்ம துறையை சார்ந்தவர்கள் முடிந்த அளவு உதவியை சரியான நேரத்துல பண்ணுங்க. அதுபோதும். அவர் இந்த நோயை ஆரம்பத்திலேயே பார்த்திருந்தா குணமாகியிருப்பார். மறைந்த தவசி அண்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபம். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X