விஜயகாந்தின் தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினாரா?.. இயக்குநர் உதயசங்கர் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதியதாக கூறிய நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இல்லையே என விஜயகாந்த் ரசிகர்கள் சண்டைக்கு வந்தனர். நன்றி கார்டு போட்டு இருக்கு பாருங்க என சீமான் தொண்டர்கள் பதிலடி கொடுக்க தற்போது இது தொடர்பாக அந்த படத்தின் இயக்குநர் உதயசங்கரே விளக்கம் கொடுத்துள்ளார்.
2001ம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் தவசி. அந்த படத்தில் செளந்தர்யா நாயகியாக நடித்திருந்தார். வடிவேலு, பொன்னம்பலம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப் படமாக மக்கள் எப்போது டிவியில் போட்டாலும் விரும்பிப் பார்க்கும் படமாக தவசி உள்ளது.

வசனத்துக்கு பெயர் போன தவசி: உதயசங்கர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு விஜயகாந்த் டபுள் ஆக்ஷனில் நடித்து வெளியான படம் தான் தவசி. "துளசி வாசம் மாறினாலும் மாறும் ஆனால், இந்த தவசி வார்த்தை மாறாது" என விஜயகாந்த் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது. புயல் அடிச்சு பொழச்சவன் இருக்கான் இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் இல்லை என்றும் வசனம் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், அந்த வசனத்தை எழுதியதே நான் தான் என சீமான் கூறியது சர்ச்சையை கிளப்பியது.
சோஷியல் மீடியாவில் விவாதம்: தவசி படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம் என மூன்றையும் உதயசங்கர் தான் செய்தார் என்றும் சீமான் இந்த விஷயத்திலும் இப்படி பொய் சொல்றாரே என விஜயகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சண்டையை ஆரம்பித்தனர்.
நன்றி கார்ட்: விஜயகாந்த் ரசிகர்கள் ஒருபக்கம் விளாசி வரும் நிலையில், அப்போது ஏன் இயக்குநர் சீமான் அவர்களுக்கு நன்றி என நன்றி கார்டு அந்த படத்தில் விஜயகாந்த் போட்டுள்ளார் என சீமான் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தவசி படத்தின் இயக்குநரே விளக்கம் அளித்துள்ளார்.
உதயகுமார் விளக்கம்: தவசி படத்துக்கு சீமான் வசனம் எழுதினார் என்றும் அப்போது இயக்குநராக அவர் மாறிய நிலையில், மீண்டும் எழுத்தாளராக மாற்றி விடுவார்கள். அதனால், வசனகர்த்தா என பெயர் வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் தான் அவருக்கு நன்றி சீமான் என கார்டு போட்டேன் என தெளிவுப்படுத்தி உள்ளார்.
உண்மையை சொன்னாலும்: சீமான் அண்ணே நீங்க உண்மையை சொன்னாலும் இந்த ஊர் நம்ப மாட்டுதே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சீமான் பேசியது பொய் என சொன்னவர்களுக்கு எல்லாம் இயக்குநர் வச்சாரு பாரு வேட்டு என சீமான் தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











