twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    20 வருஷமாச்சு.. இன்னும் அந்த இடுப்பை விட்டு இறங்கலையே யாரும்... "குஷி"யில் ரசிகர்கள் !

    |

    சென்னை : எப்படித்தான் காலம் இவ்வளவு வேகமாக சுழல்கிறதோ. நாம் சிறுவயது துள்ளல்கள், இனிமைகள், சினிமாக்கள் என அனைத்தும் வயதாகிவிட்டாலும் நினைவுகள் அதை புதுப்பித்து கொண்டுதான் இருக்கிறது.

    Recommended Video

    Kushi Tamil movie explained | Vijay |Jyothika |S.J.Suryah

    அந்த வகையில் பல படங்கள் பார்த்திருந்தாலும் நாம் சிறுவயதில் அதிகமாக ரசித்த படங்களுள் ஒன்று குஷி. இந்த படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் .

    ஆம்! இன்றுடன் நம் இளம் வயதை அழகாக்கிய குஷி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. அழகான திரைக்கதை, அட்டகாசமான விஜயின் நடிப்பு, குறும்புத்தனமான ஜோதிகாவின் ஈர்ப்பு என பல வகையில் நம்மை மகிழ்ச்சியாக்கிய குஷி படத்தை பற்றி பார்ப்போம்!

    சூடேற்றும் சேலை.. சொட்டும் கவர்ச்சி.. கிறுக்கேற்றும் ஷ்ரதா .. கிறுகிறு வீடியோசூடேற்றும் சேலை.. சொட்டும் கவர்ச்சி.. கிறுக்கேற்றும் ஷ்ரதா .. கிறுகிறு வீடியோ

     காதல் இயக்குனர்

    காதல் இயக்குனர்

    எஸ்.ஜெ.சூர்யாவை ஒரு அழகான நடிகராகத்தான் பலருக்கு தெரியும். ஆனால் இவர் ஒரு அட்டகாசமான இயக்குனர் என்பதை குஷி படம் நிரூபித்தது. விஜயின் திரைப்பயணத்தில் அந்த நேரம் சிறிது சறுக்கலான நேரம், அவரை உயர்த்தி பிடிக்க சரியான நேரத்தில் கை கொடுத்தார் எஸ்.ஜெ.சூர்யா. நல்ல கதைகளும் திரைக்கதை இல்லாமல் தோற்றுப்போகும் என்பது உண்மை. அந்த வகையில் ஈகோ என்ற ஒற்றை வார்த்தை வைத்து அற்புதமாக திரைக்கதை அமைத்து இருப்பார்.

     வித்யாசமான கதை

    வித்யாசமான கதை

    இப்படத்தின் க்ளைமாக்ஸ் இதுதான் என்பதை படத்தின் தொடக்கத்திலே ஆடியன்ஸிடம் சொல்லிவிட்டு படத்தை ஆர்வமாக நம்மை பார்க்க வைத்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை. கல்லூரி வாழ்க்கை, காதல், ஈகோ, ஆளை தூக்கும் வசனங்கள் என பல அம்சங்களை திரைக்கதையோடு சேர்த்து அழகான மாலையாக்கி இருக்கிறார் எஸ்.ஜெ சூர்யா, அவரின் திரைப் பயணத்தில் குஷி எப்போதும் ஒரு மைல் கல்தான்!

     கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்

    கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்

    காதலை மையமாக கொண்ட திரைப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும், அந்த கெமிஸ்ட்ரிக்கு எந்த குறையும் இல்லாமல் விஜய், ஜோதிகா என இருவரும் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு மகனாக பிறக்கும் விஜய் மாடர்ன் மைண்ட் செட் உள்ள இளைஞனாக நகரத்தில் வளருவார், அதே போல் அதற்கு எதிர்மறையாக ஒரு கிராமத்தில் பிறந்து வளரும் ஜோதிகா இருவரும் உயர் கல்விக்காக சென்னையில் உள்ள ஒரே கல்லூரியில் படிப்பை தொடங்குகிறார்கள்.

     ஜோதிகாவின் கியூட்னஸ்

    ஜோதிகாவின் கியூட்னஸ்

    ஸ்டைலிஷ் தோற்றம், அழகான டான்ஸர், பெண்களை கவரும் வசீகரம் விஜய் சிவா என்ற கதாபாத்திரம் அமைந்து இருக்க. சின்ன விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளும் தன்மை, ஈகோ, கியூட்டான லுக் என ஜோதிகாவும் அவருக்கு நேர்மறையாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருப்பார். இருவருக்கும் இடையில் வரும் அனைத்து காட்சிகளுக்குமே அற்புதமாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக மொட்டை மாடி , இடுப்பு , சண்டை, வாக்குவாதம் , எக்ஸ்பிரஷன் என்று யாரும் மறக்க முடியாது.

     நிறைய ஈகோ

    நிறைய ஈகோ

    எந்த ஒரு விஷயத்தையும் புரியும்படியாக சொல்லாமல் சுற்றி வளைத்து விஜய் சொல்ல வருவதற்குள், ஜோதிகா அதை வேறுமாறி புரிந்து கொண்டு 'சென்ஸ் இல்ல,மேனஸ் இல்ல'என்று விஜயை திட்ட ஆரமித்து விடுவார். அதன் பின் விஜய் புரிய வைத்தவுடன் தான்'சாரி...சாரி'எனவும் சொல்ல ஆரம்பித்து விடுவார். இப்படி பல முறை அவர்களுக்குள் குட்டி குட்டி சண்டை வந்தாலும் இருவரும் சொல்லிக்கொள்ளாமல் காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் தங்களில் காதலை வெளிப்படுத்த அவர்களின் ஈகோ விட்டுவைப்பதில்லை. இந்த ஈகோவை தாண்டி அவர்கள் எப்படி சேருகிறார்கள் என்பதே படத்தின் ஹிலைட்

     எடுப்பான இடுப்பு காட்சி

    எடுப்பான இடுப்பு காட்சி

    தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காட்சிகளில் ஒன்று குஷி படத்தில் இடம் பெற்ற இடுப்பு ஸீன் தான். மேட்டை மாடியில் கருப்பு நிற சேலையில் புக் படித்து கொண்டிருக்கும் ஜோதிகாவின் சேலை காற்றில் பறக்க,அதை அப்படியே பார்த்தும் பார்க்காமல் பார்க்கும் விஜயின் நடிப்பு எப்பபப்பா அருமையாக படமாக்கப்பட்டு இருக்கும். விஜய் இடுப்பை பார்ப்பதை பார்த்துவிடும் ஜோவின் கண்ணும், அவரின் முகபாவமும் வேறலெவலாக இருக்கும்.

     ரசிகர்களை கிறங்கடிக்கும் பாடல்

    ரசிகர்களை கிறங்கடிக்கும் பாடல்

    ஒரு பக்கம் இடுப்பு காட்சி பிரபலம் என்றால் இன்னொரு பக்கம் மும்தாஜ் வரும் காட்சி எல்லாம் அட்டகாசமாக இருக்கும். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வாரிவழங்கி நடித்துஇருப்பார் மும்தாஜ். ஜோதிகாவை வெறுப்பேற்ற விஜய், மும்தாஜிடன் செய்யும் சேட்டைகள் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுக்கும். அதுவும் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் ரசிகர்களை இன்றும் கிறங்கடித்து வருகிறது. 20 வருஷம் ஆனாலும் அந்த பாடலின் மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.

     மக்கள் மனதில் நிற்கும் படம்

    மக்கள் மனதில் நிற்கும் படம்

    ஒரு வருடத்திற்க்கு எத்தனையோ படங்கள் வெளிவருகின்றது, ஆனால் அனைத்துமே பேர் சொன்னால் தெரியும் அளவிற்கு இருப்பதில்லை. சில படங்கள் மட்டுமே மக்கள் மனதில் நிற்கின்றது. அந்த வகையில் பல வருடங்கள் கடந்தும் நம் நினைவுக்கு சில படங்கள் நிற்கின்றன அதில் குஷி படமும் ஒன்று . பல தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளியான குஷி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

     200 நாட்கள் ஓடியது

    200 நாட்கள் ஓடியது

    ஷில்பா ஷெட்டியின் க்யூட்டான நடனமும் துள்ளல் இசையுடன் இன்று வரை ரசிக்கும் படி மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது மாக்கோரீனா மாக்கோரீனா பாடல். 200 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த படம் வெளிவந்து இன்றுடன் 20 வருடங்கள் நிறைவடைகிறது. தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்களில் குஷி என்றும் டாப்தான். இந்த வெற்றியை விஜய் மற்றும் ஜோதிகா ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    English summary
    The 20th anniversary of the ‘Khushi' film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X