ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய அந்த 21 நிமிடம்.. 50 வருட வரலாறு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 12ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் ரஜினிகாந்த் நடித்த எஜமான், படைப்பா திரைப்படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அந்த காலத்து பெருசுகள் முதல் இந்த காலத்து ஜென் ஸிகள் வரை திரையில் பார்த்து கொண்டாடக்கூடிய ஒரு நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த். 'சிவாசி ராவ் கெயிக்வாட்' டை உலகம் நேசிக்கும் சூப்பர் ஸ்டாராக உருவாக்கிய அந்த 21 நிமிடம்கள் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி பிறந்த ரஜினிகாந்த், பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பேருந்து கண்டக்டர் வேலை, ஊதியம் குறைவு என்றாலும், மகிழ்ச்சியாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால், அவர் மனதில் மட்டும் ஒரு கனவு இருந்தது. அது நடிகராக வேண்டும் என்ற கனவு. அந்த ஆசையை ரஜினி பலரிடம் சொல்லிய போது பலரும், நல்ல ஆசைடா,
"நீ? ஹீரோவா?" என சிரித்துள்ளனர். ஆனால், ரஜினியின் மனசே மாறவே இல்லை, நடிப்பின் மீது ஆசையோடு இருப்பதை பார்த்த ரஜினிகாந்தின் நண்பர், "நடிகர் பயிற்சி பள்ளியில் சேர்றியா?" என்று கேட்டுள்ளார். அவர் கேட்டவுடன் ரஜினியும் யோசிக்காமல் ஒகே சொல்லிவிட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: பின் 1973 ஆம் ஆண்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் ரஜினிகாந்த். அங்கு தான், இயக்குநர் கே பாலசந்தரை சந்தித்தார். அப்போது, தான் ரஜினியின் வாழ்க்கையில் அந்த '21 நிமிட அதிர்ஷ்ட காத்து வீசத் தொடங்கியது. பாலச்சந்தர் ரஜினியை நடித்து காட்ட சொன்னார். உடனே ரஜினி 3 காட்சிகளில் சரியான 21 நிமிடம் நடித்து காட்டினார். அதில், ரஜினியின் eye expressions... body language...சாதாரணமாக இல்லாமல் energy ஆக இருப்பதை பார்த்தவர்கள். சரியாக 21 நிமிடம் முடியும் போது, "இவன் ஹீரோவுக்கு ஏற்றவனா?" இல்ல... இவன் ஹீரோவாக உருவாகப் போகிறவனா என அனைவரும் வியந்து பார்த்தார்கள். அப்போது, பாலச்சந்தர் சொன்ன ஒரு வார்த்தை ரஜினியின் வாழ்க்கையை மாற்றியது. "உன் பெயரை மாற்றாதே.. உன் ஸ்டைலை மாற்றாதே. ஒருநாள் இந்தியாவே உன்னை அடையாளம் காணும் என்றார்.
அந்த 21 நிமிடம்: ஆடிஷனுக்குப் பிறகு, அபூர்வ ராகம் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் நாள், முதல் ஷாட் படமாக்கப்பட்டது. கதவை திறந்துக்கொண்டு அவர் வரும் அந்த 5 நிமிட காட்சியில் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். அப்போது முதல் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திலும் அவர் மட்டும் தான் பேசப்பட்டார். சில வருடங்களிலே ஒரு சாதாரண கண்டக்டரிலிருந்து சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் ரஜினிகாந்த். அவரின் வாழ்க்கையை மாற்றியது அவரின் விடாமுயற்சி, அவருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, நம்பிக்கை, அந்த 21 நிமிடங்கள்.


Click it and Unblock the Notifications











