இயக்குனர் ஷங்கர் இம்ப்ரஸான திரைப்படங்கள்… லிஸ்ட்ல ரெண்டு தமிழ் படம் இருக்கு!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் 2.o திரைப்படத்தைத் தொடர்ந்து இப்பொழுது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகையும் அண்ணார்ந்து பார்க்க வைத்துவரும் இவர் சினிமாவில் தற்போது உள்ள லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை இந்திய திரைப்படங்களில் பயன்படுத்தும் இயக்குனர்களில் முதன்மையில் உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்களை பார்த்து விட்டு அசந்துபோன ஷங்கர் அந்த திரைப்படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி உள்ளது.

பாராட்டுவதிலும் தயங்கியதில்லை

பாராட்டுவதிலும் தயங்கியதில்லை

ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் உலக அளவில் பல வசூல் சாதனைகளை செய்து பல்வேறு பாராட்டுகளை பெற்று வரும் அதே சமயம் மற்ற இயக்குனர்கள் இயக்கும் தரமான திரைப்படங்களை பாராட்டுவதிலும் தயங்கியதில்லை.

மிகப்பிரம்மாண்டமாக

மிகப்பிரம்மாண்டமாக

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மிகச் சிறந்த திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் ஷங்கர் இப்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை மிகப்பிரம்மாண்டமான முறையில் இயக்கி வர இதில் மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.

மிகவும் கவர்ந்துள்ளது

மிகவும் கவர்ந்துள்ளது

இந்த நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெளியான திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்த நிலையில், ஷங்கர் சமீபத்தில் வெளியான சில திரைப்படங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

ஜிவியின் இசை

ஜிவியின் இசை

அந்தப் பதிவில் முதலில் பாராட்டி இருப்பது சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று. சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் கவர்ந்துள்ள நிலையில் நடிகை சமந்தா உட்பட பல திரைப் பிரபலங்கள் பாராட்டிப் பேசி உள்ள நிலையில் இயக்குனர் ஷங்கரும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சூரரைப் போற்று ஒரு ஆத்மார்த்தமான திரைப்படம் இதில் ஜிவி பிரகாஷின் இசை என்னை மிரள வைத்துள்ளது என பூரித்து கூறியுள்ளார்.

ஒளிப்பதிவு எக்ஸலன்ட்

ஒளிப்பதிவு எக்ஸலன்ட்

தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இப்போது தொடர் வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவை கலக்கி வரும் அட்லியின் தயாரிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்தகாரம் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆன சங்கர், அந்தகாரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் எட்வின் சக்கேயின் மிகச்சிறந்த ஒளிப்பதிவை எக்ஸலன்ட் என பாராட்டி புகழ்ந்து கூறியுள்ளார்.

வித்தியாசமான இசை

வித்தியாசமான இசை

மேலும் மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் பட்டியலில் இணைந்திருக்கும் நிலையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு இந்திய அளவில் பல விருதுகளை வென்று வர ஷங்கரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளையை வித்தியாசமான இசையை கொடுத்து உள்ளீர்கள் என பாராட்டி உள்ளார்.

படைப்புகளை பாராட்டி

படைப்புகளை பாராட்டி

இவ்வாறு தான் இயக்கும் திரைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், மற்ற இயக்குனர்களின் படைப்புகளையும் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கும் இயக்குனர் ஷங்கரின் இந்தப் பதிவு இப்பொழுது வைரலாகி வர, ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: shankar ஷங்கர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X