சாய் அபயங்கரின் 5வது இசை ஆல்பம்.. ‘பவழ மல்லி’ மியூசிக் வீடியோ இன்று வெளியீடு!

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமடைந்த இவரின் 5-வது இசை ஆல்பத்தை இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் சாய் அபயங்கர் 2022 ஆம் ஆண்டு "வலம் வரவேண்டுமே" என்ற பாடலை எழுதி இசையமைத்து வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, தனிப்பாடலான "ஆசா கூடா"வை வெளியிட்டார். இதையடுத்து இவர் RJ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி உள்ள கருப்பு படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல், அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் AA22xA6 பான் இந்திய படத்திற்கு இசையமைத்து வருகிறார். வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

Sai Abhyankkar shruti haasan
Photo Credit:

பவழ மல்லி: இந்த நிலையில், சாய் அபயங்கர் தன் ஐந்தாவது இசை ஆல்பத்தை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார். பவழ மல்லி எனப் பெயரிட்ட இந்த ஆல்பத்தில் ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் அபயங்கர் பாடியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். திருமணம் சார்ந்த பாடலாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை சாய் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் ஹிட் என்பதால் இப்பாடலுக்கு பலரும் காத்திருக்கின்றனர். இந்த இசைவெளியீட்டு விழா இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X