twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்ந்த இடத்தை விற்ற கபூர் குடும்பம்.. கண் கலங்கிய கரீனா கபூர்

    கரீனா கபூர் குடும்பத்துக்கு சொந்தமான 70 ஆண்டுக் கால பழமையான R.K studio விற்பனைக்கு வருகிறது.

    By Rajeswari
    |

    மும்பை: பாலிவுட்டின் முக்கியமான பெருமைவாய்ந்த திரைத்துறை குடும்பம் என்றால் அது கபூர் குடும்பம் தான். அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 70 ஆண்டுக் கால பழைமையான R.K studio விற்பனைக்கு வருகிறது.

    இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த R.K ஸ்டுடியோ ராஜ் கபூரால் ஆரம்பிக்கப்பட்டது. 70 ஆண்டு பழைமை வாய்ந்த இந்த இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டுப் பெறும் சேதமடைந்தது.

    The 70-year-old RKK studio owned by Kapoor family is on sale.

    இந்த இடத்தை மறுபடியும் சரி செய்ய நிறையச் செலவு ஆகும் என்பதால் கபூர் குடும்பம் இந்தக் கஷ்டமான முடிவை எடுத்துள்ளது.

    இது பற்றி கூறிய அந்தக் குடும்பத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நாயகி கரீனா கபூர், அந்த இடம் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான ஒன்று என்றும் அவருடைய சிறு வயது நினைவுகள் நிறைய உள்ளது என்றும் கூறினார். இந்த முடிவு தனக்கு மிகவும் கஷ்டமான ஒன்றுதான் என்றும் இருப்பினும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தின் முடிவு என்பதால் தன்னால் எதுவும் கூறமுடியாது என்று கூறினார்.

    1948 இல் ராஜ் கபூர் பெயரில் அவரால் உருவாக்கப்பட்ட இந்த இடம் பல வெற்றிப்படங்களைத் தந்ததன் மூலம் அந்த ஊருக்கு ஒரு அடையாளமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The 70-year-old RKK studio owned by Kareena Kapoor family is on sale, It was noteworthy that this place was created by Raj Kapoor in 1948 and was a sign of the city by giving it many hits.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X