twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    75வது கேன்ஸ் திரைப்பட விழா… கோலாகலமாக தொடங்கியது !

    |

    பிரான்ஸ் : 75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.

    இன்று தொடங்கும் இந்த சர்வதே திரைப்பட விழா மே28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மிஷிங் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் மற்றும் ஹாலிவுட் என 600க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

    Recommended Video

    Red Carpet வரவேற்பு... கெத்தாக கலந்துகொண்ட இந்திய சினிமா பிரபலங்கள் |Filmibeat Tamil

    The 75th Cannes International Film Festival

    இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பிரான்ஸில் ஜூரி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்டார். அந்த விருந்து நிகழ்ச்சியில் தீபிகா மிகவும் ஸ்டைலாக காணப்பட்டார். அந்த விருந்தில், திரைப்பட தயாரிப்பாளர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ், இத்தாலிய நடிகர் ஜாஸ்மின் டிரின்கா, இயக்குனர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    The 75th Cannes International Film Festival

    கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும் தம்பு மலையாளப் படமும் திரையிடப்படுகிறது. அரவிந்தன் இயக்கத்தில், 1978ல் வெளியான இப்படத்தில் நெடுமுடி வேணு, பரத் கோபி, ஜலஜா உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம், கேரளாவின் சிறந்த இயக்குனர், சிறந்த மலையாளப் படம் மற்றும் தேசிய விருதையும் பெற்றுள்ளது.

    மேலும், கோதாவரி, ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு, துயின் மற்றும் ட்ரீ ஃபுல் ஆஃப் கிளிகள் ஆகியவை பிரான்சின் ஒலிம்பியா தியேட்டரில் திரையிடப்பட உள்ளது. மேலும், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்ற இரவின் நிழல் படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. அதே போல கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் டிரைலரும் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The 75th Cannes International Film Festival opens on May 17, ushering in what is touted to be a mandate-free, mask-optional celebration of cinema through May 28.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X