twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடப் பரிதாபமே.. மன்மோகன் சிங் வாழ்க்கையை படமாக எடுத்தவர் ஜிஎஸ்டி முறைகேட்டில் கைது!

    மன்மோகன் சிங் வாழ்க்கையை படமாக எடுத்த இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    |

    மும்பை: தி ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்பட இயக்குனர் விஜய் ரத்னாகர் கட்டே ஜிஎஸ்டி மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்தே பல்வேறு வகையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. அதே நேரத்தில் ஆதரவும் உள்ளது.

     The Accidental prime minister director arrested!

    இந்த நிலையில் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் விஜய் ரத்னாகர் கட்டே, ரூ.34 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்ததாக கைது செய்யபட்டுள்ளார்.

    முன்னாள் இந்தியப் பிரதமரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தி ஆக்ஸிடண்டல் ப்ரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகிவருகிறது. பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இப்படத்தில் மன்மோகன் சிங் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கும் ரத்னாகர் கட்டே, போலியான ஆவணங்கள் மூலம், ரூ.34 கோடி ஜிஎஸ்டி முறைகேடு செய்ததாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை நுண்ணறிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    149 போலியான ஆவணங்களை தயார் செய்து 34 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரத்னாகர் கட்டேவை , ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தயாரிப்பாளரன ரத்னாகர் கட்டே இயக்கும் முதல் திரைப்படம் தி ஆக்ஸிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரத்னாகர் கட்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    Former Indian Prime Minister Manmohan singh biopic movie director Vijay Ratnakar Gutte has been arrested in GST fraudulent case. The movie is produced and directed by him, actor Anupam Kher plays as Manmohan singh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X