twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்... மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

    By Shankar
    |

    மும்பை: பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாகப் படமாக்குவதில் பாலிவுட் முதலிடத்தில் நிற்கிறது.

    காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், இந்திரா காந்தி, பகத் சிங், சச்சின், டோணி என பல படங்களைக் கூறலாம். அந்த அளவுக்கு வேறு மொழிகளில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவதில்லை.

    அந்த வரிசையில் இப்போது அடுத்த வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாகிறது. அது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை.

    'The Accidental Prime Minister' Manmohan Singh

    படத்துக்குப் பெயர் தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர். மன்மோகன் சிங் தற்செயலாக பிரதமர் பதவிக்கு வந்தவர் என்பதைக் குறிப்பிடும் தலைப்பு இது.

    ரிசர்வ் வங்கி, உலக வங்கிகளில் தலைமைப் பொறுப்பில் இருந்த மன்மோகன் சிங்கை, நிதியமைச்சராக்கி நாட்டின் பொருளாதார இயல்பையே மாற்றினார் பிவி நரசிம்மராவ். அதன் பிறகு சோனியா காந்தி அவரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.

    பத்தாண்டுகள் வலிமையான பிரதமராக அவர் ஆட்சி செய்தார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் தொகுப்பாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

    மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார் தெரியுமா? பாஜகவின் தீவிர ஆதரவு சினிமா பிரமுகரான அனுபம் கெர்.

    சுனில் போஹ்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை, விஜய் ரத்னாகர் குட்டெ இயக்குகிறார். ஹன்சல் மேத்தா எழுதிய The Accidental Prime Minister என்ற புத்தகத்தை தழுவி உருவாகும் படம் இது.

    English summary
    In Bollywood, a movie is in making on the basis of former PM Manmohan Singh's life story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X