நடிகரின் மனைவியிடம் கத்திமுனையில் 200 பவுன் நகை கொள்ளை..சென்னையில் அடைமழையை பயன்படுத்தி துணிகரம்

சென்னை: சென்னையில் அடைமழை பெய்யும் நிலையில் பிரபல நடிகரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் நடிகர் மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையில் நடிகர் ஆர்.கே வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

சென்னையில் போதை பொருள் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. போதைக்காக பணத்தேவைக்காக பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுதவிர திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை சென்னையில் இல்லாத ஒரு சம்பவம் நேற்று நந்தம்பாக்கத்தில் நடந்துள்ளது. இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் முன்னர் அடிக்கடி நடக்கும். ஆனால் சமீப ஆண்டுகளில் இப்படி நடந்ததில்லை. அதுவும் பிரபல் நடிகர் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்கள்

சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்கள்

நந்தம்பாக்கத்தில் வசிப்பபவர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவர் அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். காந்தப்படுக்கை விவகாரத்தில் சிக்கிய இவர் மீது புகார்கள் உள்ளது. இவர் சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வெளியே சென்றிருந்த நேரம் இவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

நடிகர் ஆர்கே

நடிகர் ஆர்கே

நந்தம்பாக்கத்தில் வசிப்பபவர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன். இவர் அழகர் மலை, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். காந்தப்படுக்கை விவகாரத்தில் சிக்கிய இவர் மீது புகார்கள் உள்ளது. இவர் சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வெளியே சென்றிருந்த நேரம் இவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் கடும் மழை

சென்னையில் கடும் மழை

சென்னையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதைப்பயன்படுத்தி நடிகர் ஆர்.கே வீட்டுக்குள் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் வீடுபுகுந்து கொள்ளை அடித்துள்ளது. கனமழை காரணமாக அவரவர் வீட்டுக்குள் முடங்கியிருந்ததை பயன்படுத்திக்கொண்ட கும்பல் ஆர்.கே.வீட்டுக்குள் பின் வாசல் வழியாக நுழைந்துள்ளது. வீட்டில் ஆர்.கேவின் மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த கொள்ளை கும்பல் ஆர்.கே மனைவியை கத்தி முனையில் மிரட்டி 200 பவுன் நகை, 2 லட்ச ரூபாய் பணத்தையும் அந்த கும்பல் பறித்துக்கொண்டு அவரை கட்டிப்போட்டுவிட்டு சென்றுள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸார்

சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸார்

அதன்பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து ஆர்.கே.மனைவியை மீட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் சமபவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் பின் வாசல் வழியாக வந்துள்ளனர், திட்டம் போட்டு இந்த கொள்ளை நடந்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். ஆகவே யாரோ நீண்ட நாள் கண்காணித்து இந்த திருட்டை செய்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். அங்கு அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X