சீரியல் டூ சினிமா.. தமிழ் திரைப்படங்களில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் !

சென்னை : தமிழ் திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகர்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் ஜொலிப்பது இல்லை என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது.

அதற்கு காரணம் சீரியல் நடிகர்களுக்கு திரைப்படங்களில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என பரவலாக சொல்லப்படுகிறது

இருப்பினும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி சிலர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.

அசாதாரணமான நடிப்பு

அசாதாரணமான நடிப்பு

தமிழில் பல்வேறு திரைப்படங்களின் மூலம் பல சவாலான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து நம் அனைவரையும் தனது அசாதாரணமான நடிப்பின் மூலம் மிரட்டி வரும் விஜய் சேதுபதி தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தென்மேற்கு பருவக்காற்று

தென்மேற்கு பருவக்காற்று

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

சீதாவின் மகனாக

சீதாவின் மகனாக

இந்நிலையில் இவரின் ஆரம்ப காலகட்டத்தில் தனது நடிப்பு வாழ்க்கையை சீரியலில் இருந்து தான் தொடங்கியுள்ளார். 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பெண் சீரியல் மிகவும் பிரபலமானது. இதில் நடிகை சீதா லீட் ரோலில் நடிக்க விஜய்சேதுபதி சீதாவின் மகனாக நடித்திருப்பார்.

பல அவதாரங்கள்

பல அவதாரங்கள்

சீரியலில் அறிமுகமாகி பின் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல என சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களில் தோன்றிய தற்பொழுது நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய்சேதுபதிக்கு சகோதரர்

விஜய்சேதுபதிக்கு சகோதரர்

மேலும் பெண் சீரியலில் அட்டகத்தி, விசாரணை, குண்டு போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தினேஷ் விஜய்சேதுபதிக்கு சகோதரராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயாதமான்

மேயாதமான்

தமிழில் வளர்ந்துவரும் கதாநாயகிகளில் பல ரசிகர்களை கொண்டு முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். தமிழில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

கலக்கி வருகிறார்

கலக்கி வருகிறார்

அழகும் அமைதியும் ஒருசேர அமைந்த பிரியா பவானி சங்கர் தனது அழகான நடிப்பின் மூலம் இன்றுவரை அனைவரையும் கவர்ந்து வந்தார். மேயாத மான் படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் வித விதமான கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

இவ்வாறு திரைப்படங்களின் கலக்கி வரும் பிரியா பவானி சங்கர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற மிகப் பிரபலமான சீரியலில் லீட் ரோலில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அப்போதே உருவாக்கிக்கொண்டார்.

முக்கியமான வேடத்தில்

முக்கியமான வேடத்தில்

தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் தற்பொழுது கையில் ஒரு டஜன் படங்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க முடியாத

மறக்க முடியாத

தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு நடிகை வாணி போஜன். தமிழில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் ஒருவராக சேர்ந்த வாணி போஜன் தற்பொழுது திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

பட்டி தொட்டி எங்கும்

பட்டி தொட்டி எங்கும்

இவர் நடித்த பல தொலைக்காட்சி சீரியல்களில் தெய்வமகள் பட்டி தொட்டி எங்கும் பரவி இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இவ்வாறு சீரியல் மூலம் பிரபலமான வாணிபோஜன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

மீக்கு மாத்திரமே ச்செப்தா

மீக்கு மாத்திரமே ச்செப்தா

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரித்த மீக்கு மாத்திரமே ச்செப்தா மற்றும் தமிழில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

சீரியல் ஸ்பெஷல்

சீரியல் ஸ்பெஷல்

பாலச்சந்தர் அவர்களிடம் துணை இயக்குனராக இருந்தவர் பல சீரியல்களில் நடிகராகவும் தென்பட்டார் . அது மட்டும் அல்லாமல் பல வெற்றிகளை சீரியல் மூலம் நிரூபித்தார் . விதவிதமான சீரியல்கள் இயக்கினார் குறிப்பாக அண்ணி என்கிற ஜெயா டி வீ சீரியல் மிகவும் பிரபலமானது. இதை தொடர்ந்து இப்பொழுது சினிமாவிலும் தவிர்க்க முடியாத இயக்குனராகவும் நடிகராகவும் அசதி கொண்டு இருக்கிறார்.

Recommended Video

உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு
பாலிவுட் பாஷா

பாலிவுட் பாஷா

ஹிந்தி சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக வெற்றிவாகை சூடியவர் ஷாருக் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , இவரின் ஆரம்ப கால வாழ்க்கையை சீரியல் மூலமாக தான் துவங்கினார் . அதே போல் ரோஜாக்கூட்டம் மூலம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீகாந்த் பல சீரியல்கள் நடித்து உள்ளார் . சாக்லேட் பாயாக கொண்டாட பட்டு பெண்களின் மனதை மிகவும் கொள்ளை கொண்ட மாதவனும் பல சீரியல்கள் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்த சீரியல் நடிகர்கள் திரைப்படங்களில் ஜொலிக்க முடியாது என்ற தடைகளை உடைத்து தற்பொழுது திரைப்படங்களில் இவர்களைப் போன்ற பல நடிகர்கள் சாதித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X