மூச்சுவிடவே முடியல.. நுரையீரல் தொற்றால் தவிக்கிறேன்.. நிதி உதவி கேட்கும் நடிகை!
சென்னை: பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் சந்தியாவின் அம்மாவாக நடித்தவர் தான் காதல் மல்லேஸ்வரி. உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மல்லேஸ்வரி. உடன்பிறப்பு, சோலையம்மா, பாட்டு வாத்தியார், அரவான், தோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், காதல் திரைப்படத்தில் சந்தியாவின் அம்மாவாக நடித்து பிரபலமானார்.

மூச்சுவிடவே முடியல: அந்த படத்திற்கு பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், என்னால் மூச்சுவிடவே முடியல, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறேன்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், B block 6th floor T2F614 பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறேன் என மல்லேஸ்வரி கூறியுள்ளார். மேலும், தனக்கென்று யாரும் இல்லாததால், திரையுலகில் இருப்பவர்களின் உதவியை நாடி, வீடியோ வெளியிட்டு, தன்னுடைய Gpay Number (9176945876) நம்பரை அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











