நான் கிழவனை கட்டிக்கிட்டா உங்களுக்கு என்ன? படுக்கையை பத்தி பேசாதீங்க..கொந்தளித்த சீரியல் நடிகை!

சென்னை: நடிக்க வந்துவிட்டாலே நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை விவாத பொருளாகவே மாறிவிடுகிறது. நம்ம வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல், நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலர் ஆர்வமாக இருப்பதால், பொதுவெளியில் அவர்களை மோசமாக விமர்சித்தும் வருகின்றனர். அப்படி தன் திருமணம் குறித்து வந்த மோசமான விமர்சனத்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சீரியல் நடிகை.

மலையாளத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பத்தராமட்டு சீரியலில் தாத்தாவாக நடித்து வரும் கிரிஸ் வேணுகோபாலும், அதே சீரியலில் நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரும் அக்டோபர் 30ந் தேதி அதாவது தீபாவளிக்கு முன் தினம் குருவாயூர் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பத்தரமாட்டு என்ற சீரியலில் நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கியதை அடுத்து, எந்த மீடியாவிற்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை ஷேர் செய்திருந்தனர்.

kris venugopal divya sridhar marriage

திவ்யா ஸ்ரீதர்,கிரிஸ் வேணுகோபால் திருமணம்: இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து இணையத்தில் படுமோசமான விமர்சனங்கள் எழுந்தன. அதில் கிழவனை திருமணம் செய்து கொண்ட நடிகை, பணத்திற்காக நடந்த திருமணம் என்று விமர்சித்தது மட்டுமில்லாமல் படுக்கை அறை குறித்தும் படுமோசமாக விமர்சிக்க தொடங்கினார்கள்.

திவ்யா ஸ்ரீதர் பதிலடி: இதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ள சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், கிரிஸ் என்னிடம் காதலை தயக்கத்தொடுதான் கூறினார். முதலில் இதைஅவர் சொன்ன போது, இதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அதன்பிறகு தான்உண்மையில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார் என்பதை புரிந்து கொண்டேன். இது எனது இரண்டாவது திருமணம் என்பதால், எனது இரண்டு குழந்தைகளிடம் முதலில் அனுமதி பெற்றேன். அப்போது என் மகள், நீ மறுமணம் செய்து கொண்டாலும் எனக்கு கவலையில்லை என்று தன் மகள் கூறினார். கிரிஸை திருமணம் செய்து கொண்ட போது, குழந்தைகள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், தங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தந்தை கிடைத்து இருப்பதை அவர்கள் உண்ர்கிறார்கள்.

kris venugopal divya sridhar marriage

யாருக்கு என்ன பிரச்சனை: ஆனால், பத்திரிக்கையில் எங்கள் திருமணம் குறித்து வரும் கமெண்டுகளை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது. இது அறுவதாவது கல்யாணம் என விமர்சிக்கிறார்கள். தனக்கு 38 வயதாகிறது. அவரக்கு 49 வயதாகிறது. அப்படியே இருந்தாலும் வயதானவரை நான் திருமணம் செய்து கொண்டதில் யாருக்கு என்ன பிரச்சனை, ஒரு நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாதா, செக்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது, மோசமான கருத்துக்களை இணையத்தில் பதிவிடுபவர்கள் புரிந்து கொள்ள கொண்டும் என்று திவ்யா ஸ்ரீதர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X